‘’ நான் அழகாக இல்லை என்ற வருத்தம் உண்டு’’  -மனம் திறந்த ரஜினி வில்லன்

Must read

‘’ நான் அழகாக இல்லை என்ற வருத்தம் உண்டு’’  -மனம் திறந்த ரஜினி வில்லன்

ரஜினிகாந்த்தின் ’’பேட்ட’ படத்தில் வில்லனாக நடித்துள்ள இந்தி நடிகர் நவாசுதீன் சித்திக், எல்லா வேடங்களுக்கும் பொருத்தமான குணச்சித்திர நடிகர்.

அவரும், ராதிகா ஆப்தேவும் நடித்துள்ள புதிய இந்திப்படம்- ’’ RAAT AKELI HAI’’.

சினிமா தியேட்டர்கள் மூடிக்கிடப்பதால், இந்த படமும் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகிறது.

வரும் 31 ஆம் தேதி ‘நெட்பிளிக்ஸ்’ தளத்தில் ரிலீஸ் ஆகும் இந்தப்படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார், நவாசுதீன் சித்திக்.

‘’இந்த படத்தில் நான் ஏற்றுள்ள வேடம் எனக்கு மாறுபட்ட வேடம்.

நான் ‘ஜாதில் யாதவ்’ என்ற போலீஸ் கேரக்டரில் நடித்துள்ளேன்.

இந்த கேரக்டரால் தனது உணர்சிகளை வெளிப்படுத்த முடியாது. ஒரு கட்டத்தில் ஒரு பெண் மீது, ஜாதில் யாதவ், காதல் கொள்வான். ஆனால் அதனை அவனால் சொல்ல முடியாது. அவனுக்குள் உள்ள தாழ்வு மனப்பான்மையே இதற்குக் காரணம்.

‘’தான் அழகாக இல்லையே ‘’ என்ற தாழ்வு மனப்பான்மை, இவனுக்கு உண்டு.

ஓர் உண்மை தெரியுமா? படத்தின் நான் நடிக்கும் கேரக்டரின் குணம் தான் எனது நிஜமான குணமும். ஆம். எனது தோற்றம் நன்றாக இல்லையே என்ற தாழ்வு மனப்பான்மை எனக்கும் உண்டு’’ என்கிறார், சித்திக்.

பா.பாரதி.

More articles

Latest article