உரிமை மீறல் தீர்மான நடவடிக்கையைச் சந்திக்கத் தயார் : ராகுல் காந்தி உறுதி

Must read

டில்லி

ன் மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வந்தால் எந்த நடவடிக்கையையும் சந்திக்கத் தயாராக உள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் மக்களவையில் பேசிய பாஜக எம்.பி. பிரக்யா தாக்கூர், காந்தியைக் கொலை செய்த நாதூராம் கோட்சேவை தேசபக்தர் என்று பேசினார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில் இது குறித்து, “ஒரு  தீவிரவாதி பிரக்யா,  மற்றொரு தீவிரவாதி கோட்சேவை தேசபக்தர் என்று அழைக்கிறார்.  இது நாடாளுமன்ற வரலாற்றில் மிகவும் வருத்தமான நாள் “எனபதிந்திருந்தார்.  இது பாஜகவினரிடையே பரபரப்பை உண்டாக்கியது.

ராகுல் காந்தியின் இந்த கருத்தை ஒட்டி  மக்களவையில் பாஜக எம்.பி. தாக்கூர், நிஷிகாந்த் துபே ஆகியோர், பிரக்யா தாக்கூரை பற்றி அவதூறாகப் பேசியதற்காக அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தினர்.   அவ்வாறு மன்னிப்பு கேட்காவிட்டால் ராகுல் காந்தி மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவர அனுமதிக்கக் கோரி அவைத்தலைவரிடம் கோரினர்.

ராகுல் காந்தியிடம் நிருபர்கள் இன்று பிரக்யா தாக்கூர் குறித்துப் பேசியது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு ராகுல் காந்தி பதில் அளிக்கையில், “டிவிட்டரில்  நான் பதிவிட்ட என்னுடைய கருத்தில் தெளிவாக இருக்கிறேன்.  நான் எப்போதும் என்னுடைய கருத்தில் நிலையாக இருக்கிறேன். இதற்காக என் மீது எந்தவிதமான நடவடிக்கை எடுத்தாலும் அதைச் சந்திக்கத் தயாராக இருக்கிறேன். அத்துடன் அதை வரவேற்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

More articles

Latest article