சென்னை:
வருமான வரி சோதனைகளை பார்த்து நான் பயப்படவில்லை என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மக்கள் நீதி மய்யத்தின் பொருளாளரும் தொழிலதிபருமான சந்திரசேகரன் தொடர்புடைய இடங்களில் இருந்து கணக்கில் வராத ரூ.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.
ஊழக்கு எதிரானவர் என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்துவரும் கமல்ஹாசனுக்கு சந்திரசேகரன் தொடர்புடைய இடங்களில் நடக்கும் சோதனை கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வருமானவரித்துறை சோதனை குறித்து மக்கள் நீதிமய்யத்தின் சார்ப்பிலோ, அல்லது சந்திரசேகரன் தரப்பிலிருந்தோ எந்த வித விளக்கமும் அளிக்கப்படவில்லை.
இந்நிலையில், வருமான வரி சோதனைகளை பார்த்து நான் பயப்படவில்லை என்றும், பாஜக தனது அரசியல் எதிரிகளை மத்திய நிறுவனங்களைப் பயன்படுத்தி மிரட்ட முயற்சிப்பதாக கமல்ஹாசன் குற்றம் சாட்டினார்.
சந்திரசேகரன் நூல் வர்த்தக வியாபாரத்தில் பல வணிகங்களுடன் ஒப்பந்தம் செய்கிறார். தாராபுரம் (ஒதுக்கப்பட்ட) சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த பாஜக தமிழக மாநிலத் தலைவர் எல்.முருகன் வேட்புமனுவைத் தொடர்ந்து இந்த சோதனை நடத்தப்பட்டதாக எம்.என்.எம் குற்றம் சாட்டியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.