சென்னை: தமிழ்நாடு காவல் துறை வடக்கு மண்டல ஐஜி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால்,  அவரது பொறுப்பை கூடுதலாக ஐஜி பெரியய்யா கவனிக்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

டக்கு மண்டல ஐஜி பொறுப்பில் இருந்த சங்கர் கொரோனா பாதிப்பு காரணமாக, விடுப்பு எடுத்துக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். வருகிற 24ஆம் தேதி வரை சங்கர் விடுமுறையில் இருப்பார்எ ன கூறப்படுகிறது..இதன் காரணமாக, வடக்கு மண்டலத்துக்கு தற்காலிகமாக,  தமிழ்நாடு காவல் துறை பொதுப்பிரிவு ஐஜியான பெரியய்யா கூடுதலாகக் கவனித்துக் கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

பொதுவாக தேர்தல் ஆணையம் விதிமுறைகளின்படி,  அரசு பணியில் உள்ளவர்கள் ஓய்வுபெறும் காலம் ஆறு மாதத்திற்கு மேல்  உள்ளவர்கள் மட்டுமே தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.  ஐஜி பெரியய்யா அடுத்த மாதம் ஓய்வுபெற இருக்கிறார். இந்த நிலையில் தேர்தல் விதிமுறைகளை மீறி அவருக்கு வடக்கு மண்டல ஐஜி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

தென்மண்டல ஐஜியாக இருந்த முருகனை தேர்தல் அல்லாத பணிக்கு மாற்ற தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்ததால் அவர், நவீனமயமாக்கல் பிரிவு ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.

இதனால் தென் மண்டல ஐஜி பொறுப்பு காலியாக உள்ளதால் அந்தப் பொறுப்பை கூடுதலாக மதுரை காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா கவனிப்பார் எனத் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.