சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி அரசியல் களத்தில் அனல்பறக்கம் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ஆகியோர் தமிழகம் வர உள்ளனர்.
தமிழக சட்டமன்ற தேர்தலை, பாரதிய ஜனதா கட்சி அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து எதிர்கொள்கிறது. பாஜகவுக்கு அதிமுக தலைமை 20 தொகுதிகளை மட்டுமே வழங்கியுள்ளது. அந்த தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகின்றன.
இந்த தேர்தலில் பாஜக சார்பில் முக்கிய  நபர்களாக கருதப்படும் மாநில தலைவர் எல்.முருகன்  தாராபுரத்தில் போட்டியிடுகிறார். அதுபோல, அரவக்குறிச்சி தொகுதியில்  அண்ணாமலை போட்டியிடுகிறார். மேலும்,  கோவை தெற்கு தொகுதியில், பாஜக தேசிய செயலாளர்  வானதி சீனிவாசன்,  ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பு போட்டி, காரைக்குடியில் எச் ராஜா போட்டி மற்றும் ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்புவும் உள்பட 20 பேர் களத்தில் உள்ளனர்.
இந்த நிலையில்,  மாநில தலைவர் எல்.முருகன், அண்ணாமலை உள்பட ஒருசிலருக்கு ஆதரவாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பிரசாரத்திற்காக  தமிழகத்திற்கு வருகை தருகின்றனர்.
தாராபுரம் தனித்தொகுதியில் போட்டியிடும்த எல்.முருகனுக்கு ஆதரவாக பிரதமர் மோடி மார்ச் 30 ஆம் தேதி  பிரச்சாரம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுபோல, ஏப்ரல் 1 ஆம் தேதி அரவக்குறிச்சியில் வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவாக அமித்ஷா பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல  வருகிற 30ம் தேதி மீண்டும் புதுச்சேரி வரும் பிரதமர் மோடி, புதுச்சேரி- கடலூர் ரோட்டில் உள்ள ஏஎப்டி திடலில் இம்மாதம் 30ம் தேதி மாலை 4 மணிக்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு, வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். முன்னதாக, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் நட்டா, மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன் ஆகியோர் அடுத்தடுத்து புதுச்சேரி வருகின்றனர். முன்னதாக இன்று (22ம் தேதி) மத்திய அமைச்சர் நிதின் கட்கரி புதுவை வருகிறார்