தராபாத்

கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் 9 மாத மகளுக்கு ஐதராபாத்தைச் சேர்ந்த பொறியாளர் பலாத்கார மிரட்டல் விடுத்ததால் மும்பை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

டி 20 உலகக் கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் அணியிடம் தோற்றது.  இதனால் பலரும் இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோலி மீது கடும் ஆத்திரத்தில் இருந்து அவரை கடுமையாகச் சாடினார்கள்.  இதில் ஐதராபாத் நகரைச் சேர்ந்த ஐஐடி பட்டம் பெற்ற பொறியாளரான ராம் நாகேஷ் சீனிவாஸ் அகுபதினி என்னும் 23 வயது இளைஞர் அதிகபட்சமாக நடந்து கொண்டுள்ளார்.

அவர் சமூக வலைத் தளங்களில் விராட் கோலியின் முகமது ஷமிக்கு எதிரான நடவடிக்கைகளால் இந்த போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததாக் குறிப்பிட்டார்.   இதற்குப் பழிவாங்க அவர் விராட் கோலியின் 9 மாத மகளைப் பலாத்காரம் செய்யப்போவதாக மிரட்டல் விடுத்தார்.   இந்த பதிவு பலராலும் ஸ்க்ரீன் ஷாட் எடுத்துப் பதியப்பட்டது.  இது முதலில் பாகிஸ்தானி ஒருவர் விடுத்த மிரட்டல் எனக் கூறப்பட்டு அதன்பிறகு ஐதராபாத்தைச் சேர்ந்த வலது சாரி ஆதரவாளர் எனத் தெரியவந்தது.

இந்த செய்தி வைரலானதால் அவரை மும்பை காவல்துறையினர் ஐதராபாத்துக்கு சென்று கைது செய்துள்ளனர்.   அவரை மும்பை அழைத்து வந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது   ராம் நாகேஷ் சீனிவாஸ் அகுபதினி குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை செய்வதாக மிரட்டல் விடுத்ததாக டில்லி காவல்துறைக்கு டில்லி மகளிர் ஆணையம் நோட்டிஸ் அனுப்பி அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்துள்ளது.