ரஜினிகாந்த் உடல் நிலை : அப்பல்லோ மருத்துவ அறிக்கை

Must read

தராபாத்

டிகர் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படப்பிடிப்புக்காக ஐதராபாத் சென்றுள்ளார்.   படப்பிடிப்பு குழுவினரில் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.  ரஜினிகாந்த்துக்கு ரத்த அழுத்தத்தில் சீரற்ற நிலை ஏற்பட்டது.  ஆகவே அவர் ஐதராபாத் நகரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   அவரது உடல்நிலை குறித்து நேற்று இரவு மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில். “ரஜினிகாந்த்தின் உடல்நிலை சீராக உள்ளது. அவரது உடல்நிலை மிகவும் நெருக்கமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவரது ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கச் சரியான அளவு மருந்துகள் தரப்படுகின்றன. இன்றிரவு மருத்துவமனையில் அவர் தங்கியிருப்பார். நாளை (சனிக்கிழமை) அவரது உடல்நிலை எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்து அவருக்குப் பரிசோதனைகள் செய்யப்படும். தற்போதைக்கு அவர் ஓய்வெடுத்து வருகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் உடல்நிலை குறித்துப் பல திரையுலக மற்றும் அரசியல் பிரமுகர்கள் விசாரித்து வருகின்றனர்.  அவருக்கு முழு ஓய்வு தேவை என மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.   ஆகவே அவரை நேரில் பார்க்க யாரும் வர வேண்டாம் என அவரது குடும்பத்தினர், மற்றும் மருத்துவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

More articles

Latest article