ஐதராபாத் : கடைசி நிஜாமின் கடைசி மகன் மரணம்

Must read

தராபாத்

தராபாத் அரசை ஆண்ட கடைசி நிஜாமின் கடைசி மகனான நவாப் ஃபசல் ஜா பகதுர் ஞாயிற்றுக் கிழமை மரணம் அடைந்தார்.

ஐதராபாத் அரசு இந்தியாவில் இணைவதற்கு முன்பு நிஜாம் வம்சத்தினரால் ஆளப்பட்டு வந்தது.   அதில் ஏழாவது மற்றும் கடைசி நிஜாமாக இருந்தவர் மிர் ஒஸ்மான் அலி கான் பகதூர் ஆவார்.   அவருக்கு ஏழு மனைவிகளும் 34 குழந்தைகளும் இருந்தனர்.    ஏழாவது மனைவியான லீலா பேகம் சாகிபாவுக்கு பிறந்த நிஜாமின் கடைசி மகன்  நவாப் ஃபசல் ஜா பகதூர் ஆவார்.    இவரது மற்ற சகோதர சகோதரிகள் ஏற்கனவே இறந்து விட்டனர்.

இவர் தந்தையார் புதைக்கப்பட்ட மஸ்ஜித் ஈ ஜுதி மசூதியை கவனிப்பதில் தனது நேரத்தையும் பணத்தையும் செலவிட்டு வந்தார்.    அது தவிர நிஜாமின் ஆன்மீக டிரஸ்டுகளுக்கு தலைவராகவும் இருந்து வந்தார்.   கடந்த சில நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்த ஜா ஞாயிறு அன்று ஒரு தனியார் மருத்துவமனையில் மரணம் அடைந்தார்.   74 வயதாகும் ஜாவுக்கு மனைவியும் ஒரு மகனும் உள்ளனர்.

அவருடைய மரணத்தினால் நிஜாம் குடும்பத்தினர் மிகவும் துக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.    இறந்த ஃபசல் ஜாவின் சொத்துக்கள் அவருடைய சட்டபூர்வமான வாரிசுகளுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.   அவருக்கு சுமார் ரூ. 4 கோடி சொத்து உள்ளதாக தெரிய வந்துள்ளது.

மறைந்த ஃபசல் ஜாவின் உடல் அவரது தந்தையை புதைத்த அதே மஸ்ஜித் ஈ ஜூதி மசூதி வளாகத்தில் புதைக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article