டில்லி:

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டத்தின்மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு காரணமாக 13 பேர் பலியானதாக அரசு அறிவித்து உள்ளது. ஆனால், 25க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போலீசாரின் கண்மூடித்தனமான துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தூத்துக்குடி துப்பாக்கி சூட்டைக் கண்டித்து  டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தை முற்றுகையிட்டு ஏராளமானோர் போராட்டம் நடத்தினர். டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தை முற்றுகையிட்டு தேசிய மனித உரிமைகள் அமைப்பு மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஏராளமான போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் தமிழ்நாடு இல்லத்தை சுற்றி தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.