சென்னை:

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து, தமிழகம் மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு வரும் 25ந்தேதி நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்துகின்றனர். இதன் காரணமாக அன்று நீதிமன்ற பணிகள் பாதிப்படையும் சூழல் உருவாகி உள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் நடத்திய போரட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 12 பேர் பலியாகி உள்னனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போலீசாரின் கண்மூடித்தனமான துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நாமக்கலில் தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர்களின் கூட்டமைப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. அதில்,  தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும் வருகின்ற மே 25-ம் தேதி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு நடத்த முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.