Skip to content

today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்

தமிழ் செய்தி இணையதளம்

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
  • Youtube
தமிழ் நாடு

ஆண்டுக்கு ரூ.314 கோடியை எப்படி திரட்ட முடியும்! சூரப்பாவிடம் தமிழகஅரசு விளக்கம் கேட்பு…

Oct 14, 2020

சென்னை: ஆண்டுக்கு ரூ.314 கோடியை எப்படி திரட்ட முடியும் என அண்ணா பல்கலைக்கழகத்திடம் தமிழக அரசு விளக்கம் கேட்டுள்ளது.  ஓராண்டில் ரூ.314 கோடியை அண்ணா பல்கலைக்கழகத்தால் திரட்ட முடியும் என கடந்த ஜூன் மாதம் சூரப்பா கூறியிருந்தது குறித்து தமிழக அரசு சார்பில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

தமிழகஅரசுக்கும், அண்ணா பல்கலைக்கழகத்துக்கும் இடையே முட்டல் மோதல் நீடித்து வருகிறது. இதன் காரணமாக அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்க மாநிலஅரசு முடிவு செய்து சட்டம் இயற்றப்பட்டு உள்ளது.

இந்த நிலையில்,  அண்ணா பல்கலைக்கழகச் சிறப்பு அந்தஸ்து விவகாரம் தொடர்பாக துணைவேந்தர் சூரப்பா சமீபத்தில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில் 5ஆண்டுகளில் அண்ணா பல்கலைக்கழகத்தால் 1,500 கோடி ரூபாய் நிதி திரட்டிக்கொள்ள முடியும். மாநில அரசின் நிதிப் பங்கீடு இல்லாமலேயே பல்கலைக்கழகத்தால் சமாளிக்கவும் முடியும். ஆகவே, பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.

இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு  திமுக தலைவர் ஸ்டாலின், பாமக தலைவர் ராமதாஸ் உள்பட அரசியல் கட்சியினர், சூரப்பா தமிழக முதல்வர் போல செயல்படுகிறார், கொள்கை முடிக்க அவர் யார் என்று கேள்வி எழுப்பபட்டது.   “மாநில அரசை கலந்து ஆலோசிக்காமல், இட ஒதுக்கீடு பற்றி கவலைப்படாமல் துணைவேந்தர் சூரப்பா இந்த விவகாரத்தில் தன்னிச்சையாகச் செயல்படுவதும், அதை மாநில அரசு வேடிக்கை பார்ப்பதும் கண்டிக்கத்தக்கது” என்று  கூறப்பட்டது.

இந்த நிலையில் சென்னையில் நேற்று (அக்டோபர் 12) செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்த சூரப்பா, “அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர்நிலை சிறப்புத் தகுதி பெறவே மத்திய அரசுக்குக் கடிதம் எழுதப்பட்டது. உயர்நிலை தகுதி கிடைத்தால் அண்ணா பல்கலைக்கழகத்துக்குப் பெரிய அளவில் வருவாய் கிடைக்கும். தமிழக அரசும் அண்ணா பல்கலைக்கழகமும் ஒருங்கிணைந்துதான் பணியாற்று கிறோம். அப்படி இணைந்து பணியாற்றினால்தான் உயர் அந்தஸ்து கிடைக்கும். அரசுடன் எந்தப் பனிப்போரும் இல்லை. பேராசிரியர்கள், தமிழக அரசு, அமைச்சர்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம்” என்று விளக்கம் அளித்தார்.
தனிப்பட்ட முறையில் தான் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதவில்லை எனத் தெரிவித்த சூரப்பா, “மாநில அரசுக்குத் தெரியாமல் நான் எந்த கடிதத்தையும் மத்திய அரசுக்கு எழுதவில்லை. மாணவர் சேர்க்கை, இட ஒதுக்கீடு ஆகியவை மாநில அரசின் கைகளில் இருக்கிறது. தற்போது என்ன நடைமுறை இருக்கிறதோ அதுதான் தொடரும். 69 சதவிகித இட ஒதுக்கீடு தொடர்பாகக் கேள்வி எழுந்தபோது, மத்திய அரசுக்கு விளக்கம் கேட்டு நான்தான் முதலில் கடிதம் எழுதினேன். 69 சதவிகித இட ஒதுக்கீட்டை ஏற்றால் மட்டுமே உயர் சிறப்பு அந்தஸ்தை ஏற்போம் என மத்திய அரசிடம் தெரிவித்துள்ளோம்” என்றார்.

இந்த நிலையில், ஆண்டுக்கு ரூ.314 கோடியை எப்படி திரட்ட முடியும் என அண்ணா பல்கலைக்கழகத்திடம் தமிழக அரசு விளக்கம் கேட்டுள்ளது.

Post navigation

ஊதியம் உள்பட பல்வேறு கோரிக்கைகள்: வருகிற 22-ந்தேதி போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கான முத்தரப்பு பேச்சுவார்த்தை…
மருத்துவபடிப்புக்கான ஓபிசி 50% ஒதுக்கீட்டில் தமிழகஅரசு கபட நாடகம்! ஸ்டாலின்

Related Post

ஆன்மிகம் தமிழ் நாடு

நாளை மதுரையில் நடைபெறுகிறது பிரமாண்டமான முருக பக்தர்கள் மாநாடு! இன்று இரவு புறப்படுகிறது சிறப்பு ரயில்….

தமிழ் நாடு

‘மினி பஸ்’ திட்டத்தால் – 90 ஆயிரம் கிராமங்கள் பயன் – பொதுமக்களிடம் வரவேற்பு! தமிழ்நாடு அரசு தகவல்…

தமிழ் நாடு

குடும்ப தகராறில் மனைவி, 2 குழந்தைகளை வெட்டிக்கொன்ற விவசாயி… இது விருதுநகர் சம்பவம்…

உலகம்

இந்தியா உலகம்

இந்தியாவிடம் போரை நிறுத்தும்படி நாங்கள் தான் கோரினோம்! பாகிஸ்தான் துணைப்பிரதமர் ஒப்புதல்

June 21, 2025 A.T.S Pandian
இந்தியா உலகம்

சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் மூன்று மடங்கு உயர்வு

June 20, 2025 Sundar
உலகம்

ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை IAEA தலைவர் ரஃபேல் க்ரோஸி அறிக்கை…

June 20, 2025 Sundar
உலகம்

ஈரான் உளவுத்துறைத் தலைவராக முகமது பாக்பூர் நியமனம்…

June 20, 2025 Sundar
உலகம்

2 நாட்களுக்கு முன்பு ஈரானை ‘நிபந்தனையின்றி சரணடைய’ எச்சரித்த டிரம்ப், இப்போது 2 வாரங்கள் அவகாசம் எடுக்கும் இக்கட்டான நிலையில் உள்ளார் ?

June 20, 2025 Sundar

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer