பாஜகவின் கொரோனா தடுப்பூசியை எப்படி நம்ப முடியும்? சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கேள்வி

Must read

லக்னோ: தான் இப்போது தடுப்பூசியை செலுத்திக் கொள்ளமாட்டேன் என்றும், பாஜகவின் தடுப்பூசியை நான் எப்படி நம்புவது என்றும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பி உள்ளார்.

 

அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில், கொரோனா தடுப்பூசி மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்தியாவிலும் கோவிஷீல்டு தடுப்பூசி விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை இன்று நாடு முழுவதும் பல நகரங்களில் தொடங்கி இருக்கிறது. இந் நிலையில், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ், பாஜகவின் தடுப்பூசியை எப்படி நம்புவது என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: நான் இப்போது தடுப்பூசியை செலுத்தி கொள்ளமாட்டேன். பாஜகவின் தடுப்பூசியை நான் எப்படி நம்புவது?. எங்கள் அரசு அமையும்போது அனைவரும் இலவச தடுப்பூசியை பெறுவார்கள். எங்களால் பாஜகவின் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள முடியாது  என்று தெரிவித்து உள்ளார்.

More articles

Latest article