13 வயது மாணவனுடன் உறவு வைத்து கர்ப்பமான  ஆசிரியைக்கு சிறை தண்டனை

Must read

13 வயதே ஆன தனது மாணவனுடன் செக்ஸ் வைத்துக்கொண்டு கர்ப்பமான ஆசிரியைக்கு அமெரிக்க நீதிமன்றம் பத்து ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணம் ஹட்சன் நகரைச்  சேர்ந்த  அலெக்ஸாண்டிரியா வெரா என்ற 23 வயது இளம்பெண், பள்ளி ஆசிரியையாக பணிபுரிகிறார்.

இவர், எட்டாம் வகுப்பு மாணவன் ஒருவனுக்கு டியூசன் சொல்லித்தருவதாக தினமும் தனது வீடடுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். இரவு அவனை தனது வீட்டிலேயே தங்க வைத்துள்ளார். இதற்கு மாணவனின் பெற்றோர் அனுமதி அளித்துள்ளனர்.

இந்த நிலையில், மாணவனுடன், ஆசிரியை செக்ஸ் உறவு வைத்துக்கொண்டிருக்கிறார் என்பது மாணவனின் பெற்றோருக்கு தெரிய வந்தது. இதையடுத்து காவல்துறையில் புகார் அளித்தனர்.

ஆசிரியை மீது வழக்கு தொடரப்பட்டது. தற்போது அந்த ஆசிரியைக்கு பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தற்போது ஆசிரியை கர்ப்பமாக இருக்கிறார் என்பதும் தெரியவந்துள்ளது.

 

More articles

Latest article