விவேக் கோபார்த்தி மற்றும் சிவக்குமார் பழனிசாமி

மஞ்சள்காமாலை நோயுடனே குழந்தைகள் பிறப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல குழந்தைகள் மூச்சுத் திணறல், போதிய எடையின்மை, குறைந்த வெப்பநிலை போன்றவற்றாலும் பாதிக்கப்படுகின்றன. இதனால் பல குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற முடியாமல் போகிறது.

இதைத் தடுக்கும் தொழில்நுட்பத்தை அமெரிக்காவில் உள்ள தமிழ் இளைஞர்களான விவேக் கோபார்த்தி மற்றும் சிவக்குமார் பழனிசாமி ஆகிய அவர்கள் இருவரும் உருவாக்கியுள்ளனர்.

சூரிய சக்தியில் இயங்கும் ஒளிக்கதிர் கருவியை இவர்கள் வடிவமைத்துள்ளனர்.  இதற்கு . ‛நியோலைட்’ என்ற நிறுவனம்  உதவியுள்ளது.

குழந்தைகளின் உயிரைக் காக்கக்கூடிய புதிய கருவி என்பதும், அது சூரிய சக்தியில் இயங்கும் என்பதும்,  மருத்து உலலகில் ஆச்சரியத்துடன் பார்க்கப்படுகிறது.

மேலாண்மை படிப்பிற்காக அமெரிக்காவில் உள்ள அரிசோனா பல்கலைக்கழகத்திற்குச் சென்ற இருவரும் 2014-ம் ஆண்டு தொழில்முனைவோர் போட்டி ஒன்றில் பங்கேற்றனர். அதில் வென்று, தங்களது திட்டத்தைச் செயல்படுத்த உதவி பெற்றனர். அவர்களுக்கு அமெரிக்காவிலேயே அலுவலகம், ஆய்வகம், மருத்துவ குழு ஆலோசனை உள்ளிட்ட பல வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டன. வாய்ப்பை பயன்படுத்தக்கொண்ட அவர்கள் தங்கள் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளனர்.

இவர்கள் கருவியை சோதனை செய்ய அசாமில்  சோதனைகளை நடத்தினர். அந்த  ஒன்றரை ஆண்டுகளில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட 66 சதவீதம் குழந்தைகளை குணப்படுத்தி சாதனை புரிந்துள்ளனர்.

.