இஸ்லாமியருக்கு வீடு தர மறுக்கும் மஹாராஷ்டிர குடியிருப்பு வாரியம்

Must read

மும்பைக்கு அரூகில் உள்ள ஹேப்பி ஜீவன் கோவாப்பரேட்டிவ் ஹவுசிங் சொசைட்டியில் இஸ்லாமியருக்கு ஒருவருக்கு தனது வீட்டை விற்க முயன்றவருக்கு சொசைட்டியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பிரச்சனை காவல்நிலையம் வரை சென்றுள்ளது.
mus
ஜிக்னேஷ் பட்டேல் என்பவர் தனது வீட்டை இஸ்லாம் மதத்தை சேர்ந்த விகார் அகமது கான் என்பவருக்கு விற்க முயன்ற போது அந்த ஹௌசிங் சொசைட்டியை சேர்ந்த 10 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து ஜிக்னேஷ் கொடுத்த புகாரின் பேரில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இஸ்லாமியருக்கு வீடு விற்கக்கூடாது என்று அவர்கள் சொல்லக்கரணம். இஸ்லாமியர் அசைவ உணவு உண்பார்கள் என்பதாகும். இந்துக்களும் அசைவ உணவு உண்கிறார்கள்தானே. அப்படியிருக்க இஸ்லாமியர் மீது மட்டும் ஏன் இந்த பேதம்? என்று கேட்கிறார் ஜிக்னேஷ். நான் யாரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று விரும்பவில்லை. இப்பிரச்சனை சுமூகமாக தீர்க்கப்பட வேண்டும் என்றே விரும்புகிறேன் என்று அவர் கூறியிருக்கிறார். இதையடுத்து பிரச்சனை சுமூகமாக முடிந்திருப்பதாக தகவல் வந்திருக்கிறது.
ஜிக்னேஷின் வீட்டை வாங்கும் இஸ்லாமியரான விகார் அகமது கான் இது பற்றி கருத்து தெரிவித்த போது. இது போன்ற புறக்கணிப்புகள் தமக்கு ஏற்கவே பலமுறை நிகழ்ந்திருப்பதாக விரக்தியுடன் கூறினார்.

More articles

Latest article