ஊட்டி:

மிழகத்தில் குதிரை பந்தயத்துக்கு பிரசித்தி பெற்ற  ஊட்டியில் இந்த மாதம் 20ந்தேதி முதல் குதிரை பந்தயம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஊட்டி நகரின் மையப்பகுதியில் உள்ள ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் நடத்தப்படும் குதிரை பந்தயம் பிரபலமானது.  சுமார் 2 மாதம் வரை நடைபெற்ற உள்ள இந்த பந்தயத்தில் பங்கேற்க வந்துள்ள குதிரைகள்,  தற்போது அதற்கு ஆயத்தமாக  நாள்தோறும் நடைபயிற்சி, ஒத்திகை பயிற்சி போன்றவைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. தற்போது ஊட்டியில்  கோடை சீசன் தொடங்கி உள்ள நிலையில், பார்வையாளர்கள் கண்டுகளிக்கும் வகையில் குதிரை பந்தயத்தை தொடங்கவும் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இந்த ஆண்டு நடைபெற உள்ள குதிரை பந்தயத்தில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் குதிரைகள் கொண்டு வரப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, சென்னை, பெங்களூர், மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பந்தய குதிரைகள் ஊட்டிக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில்,  புகழ்பெற்ற ஜாக்கிகள், பயிற்சியாளர்கள் விரைவில் ஊட்டி வருகை தர இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தற்போதுவரை குதிரை பந்தய போட்டியில் பங்கேற்க  450க்கும் மேற்பட்ட குதிரைகள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், வரும் 12ம் தேதி குதிரை பந்தயம் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.