மதுரை,

மிழகத்தில் செயல்பட்டு வரும் கந்துவட்டி கும்பல் குறித்தும், அதுகுறித்த புகார்களை விசாரிப்பது குறித்தும்  பதில் அளிக்கும்படி தமிழக தலைமை செயலாளருக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

சமீபத்தில் கந்துவட்டி காரணமாக நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளித்து இறந்தது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, கனகவேல் என்பவர் பொது நல வழக்கு மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் தமிழகத்தில் கந்துவட்டி வாங்குவதை தடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம்,   கந்துவட்டி புகாரை விசாரிக்க தனிக்குழு அமைப்பது பற்றி தலைமைச் செயலர் பதிலளிக்க வேண்டும் என்றும், மனுவிற்கு  தலைமைசெயலாளர், நிதித்துறை செயலாளர், டிஜிபி, மதுரை ஆட்சியர், காவல் ஆணையர் உள்ளிட்டோர் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.