சென்னை:

மிழகம் முழுவதும் வடகிழக்கு பருவ மழை தொடங்கி உள்ளது. இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக பெரும்பாலான பகுதிகளில் நீரால் சூழப்பட்டு தீவு போல காட்சி அளிக்கிறது.

இந்நிலையில், சென்னையில் மழை நீர் தேங்கி பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி எடுத்து வருகிறது.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்க சென்னையில் உள்ள  16 மண்டலங்களுக்கும் 16 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தொழில்துறை முதன்மை செயலாளர் அதுல்யா மிஸ்ரா தலைமையில் கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருப்பதாக சென்னை மாநகராட்சி கமி‌ஷனர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளனர்.

அதிகாரிகள் விவரம் வருமாறு:-

மண்டலம்- 1:. கே.நந்தகுமார்-சர்வ சிக்‌ஷ அபியான் மாநில திட்ட இயக்குனர், திருவொற்றியூர், செல்-94451 9001.

மண்டலம்- 2:. மரியம் பல்லவி பல்தேவ்- வணிகவரித்துறை இணை ஆணையாளர், மணலி, செல்- 75502 25802, 94451 9002.

மண்டலம்- 3: சந்தோஷ்பாபு- ஆதி திராவிட வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குனர், மாதவரம், செல் – 75502 25803, 94451 90003.

மண்டலம்- 4:. டி.என்.வெங்கடேஷ்- கோஆப் டெக்ஸ் மேலாண்மை இயக்குனர், தண்டையார்பேட்டை , செல் – 75502 25804, 94451 90004.

மண்டலம்- 5: பி.உமாநாத்- தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழக மேலாண்மை இயக்குனர், ராயபுரம், செல்- 75502 25805, 94451 90005.

 மண்டலம்- 6: சி.காமராஜ்- பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை, திரு.வி.க.நகர், செல் – 75502 25806, 94451 90006.

 மண்டலம்- 7: எம்.பாலாஜி- வணிக வரித்துறை இணை ஆணையாளர், அம்பத்தூர், செல் – 75502 25807, 94451 90007.

மண்டலம்- 8: ஆர்.ஆனந்தகுமார்- நிதித்துறை கூடுதல் செயலாளர், அண்ணாநகர் , செல் – 75502 25808, 94451 90008.

மண்டலம் -9: ஆர்.செல்வராஜ்- அச்சு மற்றும் காகித நிறுவன மேலாண் இயக்குனர், தேனாம்பேட்டை, செல் – 75502 25809, 94451 90009.

மண்டலம்-10: சி.விஜயராஜ் குமார்- சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலாளர், கோடம்பாக்கம், செல் – 75502 25810, 94451 90010.

மண்டலம்-11:  ஆர்.கிஷோர்குமார்- தமிழ்நாடு வாணிப கழக உறுப்பினர் செயலாளர், வளசரவாக்கம், செல் – 75502 25811, 94451 90011.

மண்டலம்-12: கிரண்குர்ராலா – குடும்ப நலத்துறை துணை செயலாளர், ஆலந்தூர் , செல் – 75502 25812, 94451 90012.

மண்டலம்-13: மைதிலி கே.ராஜேந்திரன்-, பொதுத்துறை கூடுதல் செயலாளர், அடையாறு, செல் – 75502 25813, 94451 90013.

மண்டலம்-14: ஆர்.பழனிசாமி- சுரங்கத்துறை ஆணையாளர், பெருங்குடி, செல் – 75502 25814, 94451 90014.

மண்டலம்-15: தாரேஸ் அகமது- மாநில ஊரக சுகாதாரத் திட்ட இயக்குனர், செல் – 75502 25815, 94451 90015.

16: அனு ஜார்ஜ்- சர்க்கரை உற்பத்தி கழக இயக்குனர், மாநகராட்சி தலைமையிடம்- செல் – 75989 60125.