சென்னை:  மத்திய உள்துறை அமைச்சர் வரும்14ந்தேதி தமிழ்நாடு வருகை தர உள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது.  சேலத்தில் பிப். 14 ஆம் தேதி நடைபெற இருக்கும் பாஜக மையக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள அமித்ஷா வருகை தரஇருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதால், அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. அனைத்து கட்சிகளிலும் தேர்தல் வேலைகளில் தீவிரமாக களப்பணியாற்றிவருகின்றன. ஆட்சியை தக்க வைக்க திமுக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில் ஆட்சியை கைப்பற்ற அதிமுக முயற்சித்து வருகிறது. இதற்காக பாஜக, பாமக உள்பட சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. மேலும், தேமுதிக உள்பட சில கட்சிகளை வளைக்கவும் பேசி வருகிறது.

இந்த நிலையில்,  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீண்டும் தமிழ்நாடு வருகைதர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ஜனவரி மாதம் புதுக்கோட்டை வருகை தந்த நிலையில், தற்போது மீண்டும் வருகை தர உள்ளார்.

சேலத்தில் பிப்ரவரி 14 ஆம் தேதி   பாஜக மையக்குழு கூட்டம் நடைபெறுகிறது.  இந்த கூட்டமான மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதால்,  இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை தரவுள்ளார். இதனைத் தொடர்ந்து பிப். 14 ஆம் தேதி மாலையில் அங்கு  நடைபெறும் பொதுக் கூட்டத்திலும் அமித் ஷா பங்கேற்கிறார்.  இதை முடித்துக்கொண்டு, அங்கிருந்து காரைக்காலுக்கும் செல்லவுள்ளார்.  அங்கும்,  அரசு மற்றும் கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நிகழ்ச்சி விவரங்கள் இறுதி செய்யப்படாத நிலையில், அடுத்த சில நாள்களில் அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் விவரம் வெளியாகும் என்று புதுவை மாநில பாஜக முதன்மை செய்தித் தொடர்பாளர் எம். அருள்முருகன் தெரிவித்துள்ளார்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற்றவுள்ள நிலையில், மத்திய அமைச்சர் அமித் ஷாவின் வருகை  அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது.

[youtube-feed feed=1]