கொரோனா தொற்று பரவல் உலகம் முழுவதும் நீடித்து வருகிறது. கோலி வுட் முதல் பாலிவுட் ஹாலிவுட் வரை பிரபலங்கள் பலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது,


ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் படத்தில் நடித்த ஹாலிவுட் நடிகர் ராக். இவருக்கு கொரொன தொற்று ஏற்பட் டுள்ளது. அவருடன் சேர்த்து மனைவி, மகளுக்கும் தொற்று ஏற்பட்டிருகிறது.
சமீபத்தில்தான் கொரோனா தொற்று வராமல் தான் எப்படி பாதுகாப்பாக இருக்கிறேன் என்பது பற்றி ராக் கருத்து தெரிவித்தார். தற்போது அவரே பாதிப்புக்குள்ளாகி இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
ராக் கொரோனாவுக்குள்ளாகி இருப்பது உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களை ஷாக்கில் ஆழ்த்தி உள்ளது. ராக் மற்றும் குடும்பத்தினரும் குணம் அடைய வேண்டும் என்று பிரார்த்தனை கள் வெளியிட்டுள்ளனர்.


இதுகுறித்து ராக் கூறும்போது, ’சவாலான மற்றும் கடினமான காலத் திலிருந்து நாங்கள் கண்டிப்பாக மீண்டு வருவோம்’ என்று தெரிவித் துள்ளார்.