சென்னை: தமிர்நாட்டில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு ஜனவரி 16ந்தேதியும், குடியரசு நாளை முன்னிட்டு, ஜனவரி 26ந்தேதியும்  டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  திருவள்ளுவர் நாள் வருகிற 16 ஆம் தேதியும் (திங்கள்கிழமை), குடியரசு நாள் 26 ஆம் தேதியும் (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, தமிழ்நாடு மதுபான சில்லரை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 2003, விதி 12 மற்றும் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981 விதி 25 2ஏ ஆகியவைகளின் கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள் வருகிற 16 மற்றும் 26 ஆகிய 2 நாள்கள் கண்டிப்பாக மூடப்பட்டு இருக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.

அதேபோல், கிளப்புகளை சார்ந்த பார்கள், ஓட்டல்களை சார்ந்த பார்களும், இதர பார்களும் என அனைத்தும் கண்டிப்பாக மூடி இருக்க வேண்டும் என்றும், இந்த 2 நாள்களில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என்றும், மீறினால் மதுபான விற்பனை விதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் .

இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.