பள்ளி ஆசிரியர்களுக்கு வரும் 22ம் தேதி விடுமுறை! பள்ளிக்கல்வித்துறை…

Must read

சென்னை: ஜனவரி 22ந்தேதி சனிக்கிழமை பள்ளி ஆசிரியர்களுக்கு விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகள் ஜனவரி 31ந்தேதி வரை மூடப்பட்டுள்ளது. இருந்தாலும் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்,  வருகிற ஜனவரி 22 ஆம் தேதி (சனிக்கிழமை) ஆசிரியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

வாரத்தின் 6 நாட்கள் பள்ளிகள் நடைபெற்று வந்த நிலையில், கல்வி நிலையங்கள் மூடப்பட்டு உள்ளதால்,  வருகிற ஜனவரி 22 (சனிக்கிழமை) அன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அன்றைய தினம் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை என்று பள்ளிக்கல்வித்துறை விளக்கம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது.

More articles

Latest article