சென்னை: இந்து சமய அறநிலையத்துறை புதிய வாகனங்கள் மற்றும் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியை, முதலவர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற விழாவில்,  இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களுக்கு ரூ 5.08 கோடி செலவில் 69 புதிய வாகனங்களை தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து,  அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி வளாகத்தில் ரூ.8.74 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இரண்டு புதிய கட்டடங்கள் திறந்து வைத்தார்.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற விழாவில், சென்னை,ராஜா அண்ணாமலைபுரம், அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் விடுதி அறைகளை திறந்து முதலமைச்சர் திறந்து வைத்தார்.