ஐ.ஏ.எஸ் டாப்பர்கள் காதலில் மூக்கை நுழைக்கும் இந்துத்துவா!

Must read

2015 ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வுகளில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற தலித் சமூகத்தை சேர்ந்த இந்து பெண்ணாகிய டினா தாபிக்கும், காஷ்மீரி முஸ்லீமாகிய ஆதர் அமீர் உல் ஷபி கானுக்கும் இடையே மலர்ந்திருக்கும் காதல் பலரது நிம்மதியையும் கெடுத்திருக்கிறது.

tinadhabi

முதலாவதாக காதலர்கள் இருவரும் நெதர்லாந்து பயணம் செய்தபோது எடுத்த ஒரு புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்த போது அதைப் பார்த்த சிலர் நெதர்லார்ந்துக்கு சுற்றுலா போகும் அளவுக்கு பண வசதி படைத்த ஒரு பெண் இடஒதுக்கீட்டை பயன்படுத்தி எப்படி முதலிடத்தில் வரலாம் என்று ஒரு சர்ச்சையை கிளப்பினார்கள். இதையடுத்து டினா தாபி இட ஒதுக்கீட்டை பயன்படுத்தவில்லை என்ற விபரம் தெரிந்ததும் அதை விட்டுவிட்டு அடுத்த ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறார்கள். அதுதான் லவ் ஜிகாத்!

athar_amir

Courtesy: JantaKaReporter

அகில பாரத இந்து மகா சபை சார்பாக டினா தாபியின் தந்தைக்கு ஒரு கடிதம் எழுதப்பட்டிருக்கிறது. அதில் டினா தாபியின் சாதனைகள் மகிழ்சிக்கும், பாராட்டுக்கும் உரியவை. அதனால் நாங்கள் பெருமைப்படுகிறோம். ஆனால் ஒரு இஸ்லாமியரை அவர் காதலித்து மணக்க முடிவு செய்திருப்பது எங்களுக்கு வலியை ஏற்படுத்துகிறது.
டினா தாபியை திருமணம் செய்ய விரும்பினால் ஆதர் அமீர் உல் ஷபி கான் “கர் வாப்ஸி” முறைப்படி இஸ்லாம் மதத்திலிருந்து இந்து மதத்துக்கு மாற வேண்டும் என்று எழுதப்பட்டுள்ளது.
ஏற்கனவே தங்களைப் பற்றி எழுந்திருக்கும் சர்ச்சைகளில் மனம் நொந்து போயிருக்கும் இந்த ஜோடியின் காதலுக்கு மதத்தின் வடிவில் இன்னொரு வில்லன் முளைத்திருக்கிறான்.

More articles

Latest article