டில்லி

ந்து மதத்தை சேர்ந்த நடிகைகள் திரை உலகில் இருந்து விலக வேண்டும் என இந்து மகாசபை தலைவர் சாமி சக்ரபாணி கூறி உள்ளார்.

ஆமிர்கான் இயக்கத்தில் வெளிவந்த டங்கல் என்னும் இந்தி திரைப்படம் உலக அளவில் வெற்றி பெற்ற ஒரு திரைப்படமாகும்.   அதில் ஜைரா வாசிம் என்னும் நடிகை அறிமுகம் ஆனார்.  அவருக்கு இந்த  படத்தில் விருதுகள் கிடைத்தன.   அதன் பிறகு அவர் சீக்ரட் சூப்பர்ஸ்டார் என்னும் திரைப்படத்தில் நடித்தார்.  அதுவும் மிகவும் ஹிட் ஆனது.

தற்போது அவருடைய மூன்றாவது படமான தி ஸ்கை இஸ் பிங்க் என்னும் திரைப்படம் வெளிவர உள்ளது.   கடந்த ஞாயிறு அன்று 18 வயதாகும் ஜைரா வாசிம் தாம் திரைப்படத்தில் நடிப்பதை விரும்பவில்லை எனவும் அவருடைய மதம் மற்றும் நம்பிக்கைகளில் நடிப்பின் தலையீடு உள்ளதாகவும் தெரிவித்தார்.

தமது நடிப்பின் மூலம் தனித்தன்மையை இழந்து வருவதாகவும் ஜைரா வாசிம் தெரிவித்துள்ளார்.   காஷ்மீரை சேர்ந்த ஒரு இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்த ஜைரா வாசிம் இவ்வாறு தெரிவித்ததற்கு இந்துமகாசபை தலைவர் சாமி சக்ரபாணி ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டிவிட்டரில் பதிவு ஒன்றை பதிந்துள்ளார்.

அந்த பதிவில், “நடிகை ஜைரா வாசிம் திரையுலகில் இருந்து விலகுவதாக முடிவு எடுத்தது, மிகவும் மதிப்பிற்குரியதாகும்.   இந்து மதத்தை சேர்ந்த நடிகைகளும் இவரை பார்த்து தாங்களும் இதே முடிவை எடுக்க வேண்டும்” என சாமி சக்ரபாணி  பதிந்துள்ளார்

 

இவரது இந்த பதிவு நடிகைகளுக்கிடையே சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.

 

பிரபல நடிகையான மல்லிகா ஷெராவத், “திரைப்படங்களில் நடிப்பது எவ்வாறு மற்றும் ஏன் இந்து மதத்தை அல்லது கலாசாரத்தை பாதிக்கிறது என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.  என்னை எங்கு வைப்பது என்பதே பாலிவுட்டுக்கு தெரியாது” என பின்னூட்டம் இட்டுள்ளார்.