டெல்லி: ‘இந்தி ஆங்கிலத்திற்கு மாற்றாக இருக்க வேண்டுமே தவிர உள்ளூர் மொழிகளுக்காக அல்ல என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37ஆவது கூட்டத்துக்குத் தலைமை வகித்துப் பேசிய ஷா, ஆங்கில மொழிக்கு மாற்றாக இந்தி மொழியே இருக்க வேண்டும் என்றும், பிற உள்ளூர் மொழிகள் அல்ல என்றும் கூறினார்.

நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழு கூட்டம் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா  நாட்டில் இந்தி மொழியின் முக்கியத்துவம் குறித்து விவாதித்தார் மற்றும் நாடு முழுவதும் ஆங்கில மொழிக்கு சரியான மாற்றாக அது எப்படி இருக்க வேண்டும் என்பதை எடுத்துரைத்தார்.

நாட்டில், ஆங்கிலத்திற்கு மாற்றாக நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தியவர்,  இந்தி உள்ளூர் மொழிகளுக்கு மாற்று அல்ல என்று விளக்கினார்.

இந்தி மொழியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய உள்துறை அமைச்சர், நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக அலுவல் மொழியை மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது என்று கூறினார். குடிமக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது, ​​​​அவர்கள் எப்போதும் பிராந்திய அல்லது மாநிலம் சார்ந்த இந்திய மொழிகளைப் பயன்படுத்த வேண்டும், ஆங்கிலம் தேவையில்லை என்றும் அவர் கூறினார். இது இந்தி மொழியின்  முக்கியத்துவத்தை அதிகரிக்கும் என்றவர், பிற உள்ளூர் மொழிகளின் வார்த்தைகளை ஏற்று இந்தி மொழியை நெகிழ்வு தன்மையுடன் மாற்றாத வரையில், அந்த மொழியை மக்களிடம் பரப்ப முடியாது.  மொழியின் பயன்பாட்டிற்கு அரசாங்கம் எவ்வாறு முக்கியத்துவம் அளிக்கிறது என்பதையும் ஷா பேசினார், மேலும் அமைச்சரவையின் 70 சதவீத நிகழ்ச்சி நிரல் இப்போது இந்தியில் தயாரிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பின்போது, ​​குழுவின் அறிக்கையின் 11வது தொகுதியை இந்திய ஜனாதிபதிக்கு அனுப்ப உள்துறை அமைச்சர் ஒருமனதாக ஒப்புதல் அளித்தார்.

தற்போதைய அரசு செயல்படும் வேகம் இதற்கு முன்னர் காணப்படவில்லை எனக் குறிப்பிட்ட அமைச்சர், குழுவின் ஒரே பதவிக்காலத்தில் மூன்று அறிக்கைகளை ஜனாதிபதிக்கு அனுப்பியது அனைவரின் கூட்டு சாதனை என்றவர்,  “வடகிழக்கு மாநிலங்களில் 22,000 இந்தி ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், வட கிழக்கின் ஒன்பது பழங்குடி சமூகங்கள் தங்கள் பேச்சுவழக்குகளின் எழுத்துக்களை தேவநாகரிக்கு மாற்றியுள்ளனர். இது தவிர, வடகிழக்கு மாநிலங்களில் உள்ள எட்டு மாநிலங்களும் பத்தாம் வகுப்பு வரை பள்ளிகளில் இந்தியைக் கட்டாயமாக்க ஒப்புக்கொண்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில்,  மத்திய உள்துறை இணை அமைச்சர்கள் அஜய் குமார் மிஸ்ரா மற்றும் நிஷித் பிரமானிக், அலுவல் மொழி நாடாளுமன்றக் குழுவின் துணைத் தலைவர் பர்த்ருஹரி மஹ்தாப் மற்றும் குழு உறுப்பினர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் முடிவில், பிரதமர் நரேந்திர மோடியின் முடிவின்படி, இந்தியாவில் ஆட்சியை நடத்துவதற்கான அலுவல் மொழி  இந்தி என்றும், இது இந்தியாவில் இந்தியின் முக்கியத்துவத்தை நிச்சயமாக அதிகரிக்கும் என்றும் அமித் ஷா கூறினார்.