சுங்கச்சாவடிகளில் டிச.1வரை டோல் கிடையாது!

Must read

டில்லி,
நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டணம்  ரத்து  டிசம்பர் 1-ம் தேதி வரை நீட்டிப்பு செய்து மத்திய அரசு அறிவித்து உள்ளது.
கடந்த 8ந்தேதி பணம் செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து, சுங்கச்சாவடிகளில்  கட்டணம் செலுத்த முடியாமல் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. இதனால்  நாடு முழுவதும் போக்குவரத்தில் பெரும் பிரச்சினை ஏற்பட்டது.
டோல் பிளாசா
இதைத்தொடர்ந்து, மத்திய வாகன போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரி 24ந்தேதி வரை சுங்க கட்டணம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். அந்த அறிவிப்பு இன்றுடன் முடிவடைவதால், மேலும் ஒரு வாரம் ரத்து அறிவிப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி டிசம்பர் 1ந்தேதி வரை நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் செலுத்த தேவையில்லை.
இதற்கான அறிவிப்பு மத்திய அரசின் நெடுஞ்சாலைத் துறை வெளியிட்டு உள்ளது.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article