பூட்டான் : மருத்துவ ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அதிக அளவில் ஊதிய உயர்வு

Must read

திம்பு, பூட்டான்

பூட்டான் நாட்டில் மருத்துவ ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு  அதிக அளவில் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

பூட்டான் அமைச்சரவை கடந்த ஐந்தாம் தேதி கூடி அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வு குறித்து ஆலோசனை செய்தது.   அதற்கிணங்க தற்போது அரசு ஊழியர்கள் அனைவருக்கும் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.    இந்த ஊதிய உயர்வின் மூலம் பல அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக மருத்துவத் துறை ஊழியர்கள் மற்றும் ஆசிரியப் பணி புரிவோருக்கு மிக அதிக அளவில் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.  இது குறித்து பூட்டான் அரசு, ”இந்த ஊதிய உயர்வின் மூலம் அதிகம் பயனடைபவர்கள் 8679 ஆசிரியர்களும் அடுத்தபடியாக 4000 மருத்துவத் துறை ஊழியர்களும் ஆவார்கள்” என தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலையில் பூட்டானில் அதிக ஊதியம் பெறும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் என ஆகி உள்ளது.  இதற்கு பூட்டான் அரசு மருத்துவம் மற்றும் ஆசிரியர் தொழிலில் மிகவும் மன அழுத்தம் உள்ளதால் இந்த ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

More articles

Latest article