மதுரை: மதுரையில் பிரமாண்டமாக திறக்கப்பட்டுள்ள நூலகத்தில், புதிதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையின் நூலாக பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது. பல வழக்குகளில் உயர்நீதிமன்றம் மதுரை கிளை விதிக்கும்  அபராத தொகையை மதுரை கலைஞர் நூலகத்துக்கு செலுத்த ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த பணத்தில், உயர்நீதிமன்ற நூலக பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சி பதவி ஏற்றதும், சென்னையைப் போல, மதுரையில் கலைஞர் கூற்றாண்டு நூலகம் பிரம்மாண்டமாக கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, மதுரையில் சுமார் 206 கோடி ரூபாய் செலவில்  3.56 ஏக்கர் பரப்பளவில் கீழ்த்தளம், தரைத்தளம் என மொத்தம் ஆறு தளங்களுடன் கலைஞர் நூலகம் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு ஜூலை 15-ஆம் தேதி  முதலமைச்சர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

இந்த  நூலகம் முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. நூலகத்தின் நுழைவு வாயிலில் கலைஞரின் சிலை வைக்கப்பட்டுள்ளது. தமிழ் நூல்கள், ஆங்கில நூல்கள், ஆராய்ச்சி நூல்களுக்கு என தனி தனி பிரிவுகள் உள்ளன. நூலகத்தின் கீழ் தளத்தில் குழந்தைகளுக்கு என தனி பிரிவு ஒதுக்கப்பட்டுள்ளது. நவீன வசதிகள் கொண்ட கலைஞர் நூற்றாண்டு நூலகம் 5 லட்சம் புத்தகங்கள் வைக்கும் அளவிற்கு பரப்பளவு கொண்டது. மேலும், இந்த  நூலகத்தில் கலைக்கூடம், மாற்றுத்திறனாளி பிரிவு, மாநாட்டு கூடம், ஓய்வறை இடம் பெற்றுள்ளது.

இந்த நிலையில், கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக, உயர்நீதிமன்ற மதுரை கிளையின் நூலாக பிரிவு அமைக்கப் பட்டுள்ளது. இந்த பிரிவில் சட்டநூல்கள் இடம் பெற்றுள்ளது. இந்த பிரிவானது பல வழக்குகளில் நீதிமன்றம் விதிக்கும் அபராத தொகை, நூலகத்தின் தனி வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வந்த நிலையில் அந்த தொகையைக் கொண்டு தொடங்கப்பட்டுள்ளது. சட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு இந்த பிரிவு உபயோகமானதாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

முன்னதாக,  கலைஞர் நூலகம் திறக்கப் பட்டதும்  உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் அபராதமாக விதிக்கப் படும் பணத்தை கலைஞர் நூலகத் துக்கு வழங்க நீதிபதிகள் முடிவு செய்தனர். இதற்காக உயர் நீதிமன்ற கிளை பதிவாளர் பெயரில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்துக்கு தனி வங்கி கணக்கு தொடங்கப் பட்டது. பெரும்பாலான நீதிபதிகள் அபராதம் விதிக்கப்படும் பணத்தை இந்த வங்கிக் கணக்கில் செலுத்துமாறு உத்தரவிடுகின்றனர்.

இவ்வாறு சேர்ந்த பணத்தில் உயர் நீதிமன்றம் சார்பில் சட்டப் புத்தகங்கள் வாங்கப்பட்டு கலைஞர் நூற்றாண்டு நூலகத்துக்கு வழங்கப்பட்டன. இப்பணிக்காக உயர் நீதிமன்றத்தில் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றக் கிளையில் இருந்துவரும் நிதியில் வாங்கப் படும் சட்டப் புத்தகங்களை வைப் பதற்காக கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 3-வது மாடியில் தனிப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதனை உயர் நீதிமன்ற நிர்வாக நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் திறந்து வைத்தார்.

இதில் நீதிபதிகள், நீதித் துறை அலுவலர்கள் பங்கேற்றனர். உயர் நீதிமன்ற கிளை விதிக்கும் அபராதப் பணத்தில் வாங்கப்படும் சட்டப் புத்தகங்கள் இனி மேல் இந்த தனிப் பிரிவில் வைக்கப்பட்டு பொதுமக்கள் படிக்க அனு மதிக்கப்படுவர் என நூலக அதிகாரிகள் தெரிவித்தனர். நூலகத்தில் திறக்கப்பட்டுள்ள சட்டப் புத்தகப் பிரிவை பொதுமக்கள், வழக்கறிஞர்கள், மாணவ, மாணவிகள் ஆர்வமாக பார்வை யிட்டு வருகின்றனர்.