சென்னை: உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் அடுத்த 3 மாதங்கள் பணிபுரிய உள்ள  நீதிபதிகள் குறித்த விவரத்தை சென்னை  உயர்நீதிமன்ற பதிவாளர் அறிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் நீதிபதிகள், 3மாதங்களுக்கு ஒருமுறை சுழற்றி முறையில், உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் பணியாற்றுவார்கள். அதன்படி, தற்போது  சென்னை உயர் நீதிமன்றத்தில் பணிபுரியும் நீதிபதிகள் சிலர் மதுரை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு உள்ளனர்.

தற்போது மதுரை உயர்நீதி மன்ற கிளையில் பணியாற்றி வரும் நீதிபதி டி.எஸ்.சிவஞானம் தலை மையிலான நீதிபதிகளின் 3 மாத பணிக்காலம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது. இதையடுத்து ஆகஸ்டு மாதம் முதல் அடுத்த 3 மாதங்களுக்கு மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்குகளை விசா ரிக்கும் நீதிபதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

இதுதொடர்பாக உயர்நீதிமன்ற பதிவாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பல், மதுரைக்கு மாற்றப்பட்டுள்ள நீதிபதிகளும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வழக்கு விவரங்களும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதனப்டி,

நீதிபதிகள் எம்.துரைசாமி, எஸ்.ஆனந்தி ஆகியோர் முதல் அமர்வில் பொதுநல மனுக்கள், ரிட் மேல்முறையீடு மனுக்களை விசாரிப்பார்கள்.

நீதிபதிகள் வி.பார்தீபன், ஜெ.நிஷாபானு ஆகியோர் 2-வது அமர்வில் ஆட்கொணர்வு மனுக்கள், குற்றவியல் மேல்முறையீடு மனுக்களை  விசாரிக்கும்.

 நீதிபதி டி.கிருஷ்ணகுமார் 2018 முதல் தாக்கலான தொழிலாளர், அரசுப் பணி தொடர்பான ரிட் மனுக்கள், தியாகிகள் ஓய்வூதிய மனுக்கள்,

நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் 2017 வரையிலான தொழிலாளர், அரசு பணி தொடர்பான ரிட் மனுக்கள்,

நீதிபதி ஆர்.சுரேஷ் குமார் மோட்டார் வாகனம், வாகன வரி, கலால், ஏற்றுமதி, இறக்குமதி, மத்திய கலால், கனிமம், வனம் மற்றும் தொழிற்சாலைகள் தொடர் பான ரிட் மனுக்கள்,

நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா 2015 முதலான இரண்டாவது மேல்முறையீடு மனுக்கள்,

 நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முதல் மேல்முறையீடு மற்றும் 2014 வரையிலான இரண்டாவது மேல்முறையீடு மனுக்களையும்,

நீதிபதி ஆர்.தாரணி 2015 முதல் 2018 வரையிலான உரிமையியல் சீராய்வு மனுக்களையும்,

நீதிபதி டி.கிருஷ்ணவள்ளி பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்கின் மேல்முறையீடு மனுக்களையும், 2018 முதலான குற்றவியல் சீராய்வு மனுக் களையும் விசாரிப்பார்.

 நீதிபதி ஆர்.பொங்கியப்பன் 2017 வரையிலான பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளின் மேல்முறையீடு மனுக்கள் மற்றும் குற்றவியல் சீராய்வு மனுக்கள், சிபிஐ, லஞ்ச ஒழிப்பு வழக்குகளையும்,

நீதிபதி பி.புகழேந்தி ஜாமீன், முன்ஜாமீன் மனுக்கள்,

நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, கல்வி, நிலச் சீர்தி ருத்தம், நில உச்சவரம்பு, கையகப்படுத்தல், நில சட்டம் தொடர்பான ரிட் மனுக்கள்,

நீதிபதி ஜி.இளங்கோவன் 2018 முதலான குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 407, 482-ல் தாக்கல் செய்யப்படும் மனுக்கள்,

நீதிபதி கே.முரளிசங்கர் 2019 முதலான உரிமையியல் மனுக்கள் மற்றும் உரிமையியல் சீராய்வு மனுக்களையும் விசாரிப்பர்.