நடிகர்கள் சூர்யா, சரத் உள்பட 8 பேர் மீதான அவதூறு வழக்கு ரத்து! ஐகோர்ட்டு

சென்னை,

டிகர் சூர்யா, சரத்குமார் உள்பட 8 பேர் மீதான அவதூறு வழக்கை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்தது.

கடந்த 2009ம் ஆண்டு நடிகைகள் மஞ்சுளா, ஸ்ரீப்ரியா, நமீதா உள்ளிட்டோர் குறித்து கூறிய கருத்துகளை கண்டித்து அந்த செய்தியை வெளியிட்ட  பத்திரிக்கையை கண்டித்து தென்னிந்திய நடிகர் சங்கக் கூட்டத்தில் கண்டன கூட்டம் நடைபெற்றது.

அந்த கூட்டத்தில் பேசிய நடிகர்கள் விவேக், சூர்யா, சத்யராஜ், சரத்குமார், அருண்விஜய், நடிகை ஸ்ரீப்ரியா உள்ளிட்ட 8 பேர் மீது நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீலகிரி நீதிமன்றம் இரண்டு மாதங்களுக்கு முன்பு திரைத்துறையைச் சார்ந்த 8 பேருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்தது.

பிடிவாரண்டை ரத்து செய்யக்கோரி நடிகர்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, நீலகிரி நீதிமன்றம் வழங்கிய பிடியாணைக்கு இடைக்கால தடை விதித்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில்,

கண்டன கூட்டத்தில் பேசியது தங்களது கருத்து சுதந்திரம் என்று கூறியிருந்தது. மேலும், இதுபோன்ற வழக்கு  5 நீதிமன்றங்களில் ரத்து பெறப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

இதை  ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், நடிகர் சூர்யா, சரத்குமார்  உள்பட 8 பேர் மீதான அவதூறு வழக்கையும் ரத்து செய்து உத்தரவிட்டது.


English Summary
High court dismissed against-surya-sathyaraj-including-8-cine-stars Defamation Case