சென்னை

யில் பயணிகளின் கியூ ஆர் கோடு ஸ்கேன் செய்து ஜி பே, போன் பே மூலம் டிக்கட்டுகளை வாங்கலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ”எக்ஸ்பிரஸ் ரயில் டிக்கெட், மின்சார ரயில் டிக்கெட்டுகளை எடுப்பதற்காக சென்னையில் பல ரயில் நிலையத்தில் தனித்தனியாக கவுண்டர்கள் இருந்த போதிலும் கூட்ட நெருக்கடி ஏற்படும் போது டிக்கெட் எடுப்பதற்காக நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால் பயணிகளுக்குக் காலதாமதம் ஏற்படுகிறது.

இதைத் தவிர்க்கும் வகையில் தெற்கு ரயில்வே தானியங்கி டிக்கெட் வினியோகம் செய்யும் இயந்திரத்தை ஒவ்வொரு டிக்கெட் வழங்கும் கவுண்டர் அறை அருகே வைத்துள்ளது. இவற்றைப் பயன்படுத்தி பயணிகள் எளிதாக தாங்களே டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம்.

மேலும் பயணிகளின் கூடுதல் வசதிக்காகத் தானியங்கி டிக்கெட் வினியோகம் செய்யும் இயந்திரத்தில் க்யூ ஆர் கோடு மூலமாகப் பணம் செலுத்தி டிக்கெட் பெறும் முறையையும் தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.  இந்த முறையில் பயணிகள் க்யூ-ஆர் கோடு ஸ்கேன் செய்து ஜி-பே, போன்-பே போன்ற செல்போன் செயலிகள் மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் மின்சார ரயில்களில் தினசரி பயணம்  செய்வோர் இந்த க்யூ ஆர் கோடு வசதி மூலம் சீசன் டிக்கெட்டைபுதுப்பிக்கலாம்.   அவ்வாறு புதுப்பிக்கும் பயணிகளுக்கு 0.5 சதவீதம் சலுகை கொடுக்கப்படும்.” எனக் கூறப்பட்டுள்ளது.