சென்னை

னி வழக்கம் போல் தமிழகத்தில் மின் கணக்கீடு செய்யும் பணிகள் நடைபெறும் என மின் வாரியம் அறிவித்துள்ளது.

இரண்டாம் அலை கொரோனாவால் தமிழகத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.  இதையொட்டி முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.   ,மக்கள் மிகவும் அத்தியாவசிய பணிகளைத் தவிர மற்ற எதற்கும் வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டது.  அவ்வகையில் பல அரசு அலுவலகங்கள் இயங்கவும் தடை விதிக்கப்பட்டது.

இத்னால் தமிழக மின் வாரிய ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று மின் கணக்கீடு செய்ய இயலாத நிலை ஏற்பட்டது.  இதையொட்டி மின் கட்டணத்தை உபயோகிப்பாளர்களே கணக்கிட்டுச் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டது.  மேலும் இந்த சலுகைகள் ஜூஉன் 15 ஆம் தேதி வரை மட்டுமே பொருந்தும் எனவும் மின் வாரியம் அறிவித்து இருந்தது.

தற்போது மின் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் தற்போது கொரோனா  பாதிப்பு குறைந்து வருகிறது.  எனவே ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனி வழக்கம் போல் மின் கணக்கீடு செலுத்தும் பணிகள் நடைபெறும்.  மின் கட்டணம் செலுத்த இனி பழைய முறை கடைப்பிடிக்கப்படும்” எனக் கூறப்பட்டுள்ளது.