மதிப்பெண் கணக்கீட்டுக்கான நெறிமுறைகள் வெளியீடு

Must read

சென்னை:
மிழகத்தில் 9- ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை நடத்துவது குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக, 9- ஆம் வகுப்பு முழு ஆண்டு தேர்வு நடைபெறாத நிலையில் மதிப்பெண்களைக் கணக்கிடும் முறை குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில், “அரையாண்டு அல்லது காலாண்டில் எந்த மதிப்பெண் அதிகமோ அதைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். காலாண்டு, அரையாண்டில் தேர்ச்சி பெறாதவர்களுக்குக் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 35 வழங்க வேண்டும். தேர்வில் வருகை புரியாத மாணவர்களுக்கும் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் வழங்க வேண்டும். நெறிமுறைகளை தலைமை ஆசிரியர்கள், முதல்வர்களுக்குத் தெரிவிக்க முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார். 2020- 2021ல் 10- ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்ச்சி சான்றிதழ் பின்னர் வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article