சென்னை

தெற்கு ரயில்வே சென்னை புறநகர் ரயில் சீசன் டிக்கட்டுகளில் 2 டோஸ் தடுப்பூசி சான்றிதழ் எண் அச்சடிக்கப்படும் என அறிவித்துள்ளது.

தமிழக அரசு கொரோனா மூன்றாம் அலையை எதிர்த்துப் போராடப் பல முயற்சிகள் எடுத்து வருகிறது  அதில் ஒரு பகுதியாக, 10.01.2022 அன்று 04:00 மணி முதல் 31.01.2022 (20 நாட்கள்) அன்று 23:59 மணி வரை புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

தெற்கு ரயில்வே.  ”இந்த புதிய கட்டுப்பாடுகளின்படி, சாதாரண பயணிகளைப் போலவே, சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்களும் தடுப்பூசிச் சான்றிதழை (இரண்டாம் டோஸுக்குப் பிறகு வழங்கப்பட்ட இறுதி தடுப்பூசி சான்றிதழ்) எடுத்துச் செல்ல வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது

மேலும் ஜனவரி 10, 2022 முதல் புறநகர்ப் பகுதிகளில் பயணம் செய்ய சீசன் டிக்கெட்டுகளைப் பெற  இந்த எண்களை  அளிக்க வேண்டும்.  இனி சீசன் டிக்கெட்டுகளில் கோவிட் தடுப்பூசி சான்றிதழ் எண்ணின் கடைசி 4 இலக்கங்கள் அச்சிடப்படும்.  அடுத்தடுத்து சீசன் டிக்கெட்டுகளைப் புதுப்பிக்கும் போது, தடுப்பூசி சான்றிதழின் கடைசி 4 இலக்கங்களை அளிக்க வேண்டும்.

தற்போது சீசன் டிக்கட் வைத்திருப்பவர்கள், பயணத்தின் போது ரயில்வே அதிகாரிகளிடம் தங்களின் இரண்டாவது டோஸ் தடுப்பூசி சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்.  தொற்று நோயைத் தடுக்க சென்னை புறநகர் சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்கள் ரயில்வேயுடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என அறிவித்துள்ளது.