இனி… தீவிர அரசியலே! கமல்ஹாசன்

Must read

சென்னை:

ரும் 21ந்தேதி முதல் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ள நடிகர் கமலஹாசன், தனக்கு நடிக்கும் எண்ணம்  இல்லை என்றும், தொடர்ந்து நடிக்கப்போவதில்லை என்றும்  தெரிவித்துள்ளார்.

மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கருத்து தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்திய நடிகர் கமலஹாசன், அரசியலுக்கு வருவதாக அதிரடியாக அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து அரசியல் தொடர்பான ஹேஸ் டேக்குகளை தொடங்கிய அவர், நாளை நமதே என்று அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப் போவதாகவும், தமிழகத்தை நாளை தமிழர்களுடையதாக, மக்கள் மகிழ்ச்சியாக வாழக்கூடிய பிரதேசமாக, தமிழகத்தை மாற்றிக் காட்டுவதே தமது கனவு என்றும் கூறினார்.

மேலும்,  தனது கட்சியின் பெயர் , கலாம் பிறந்த மண்ணில் அறிவிக்கப்படும் என்றும், அங்கிருந்தே  தனது அரசியல் பயணம் 21ந்தேதி தொடங்கும் என்றும் அறிவித்துள்ளார்.  “மக்களின் ஆதரவோடு இந்த சுற்றுப் பயணம் தொடங்குகிறேன் கரம் கோர்த்திடுங்கள்” எனவும்  தெரிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து தனது அரசியல் கட்சியின் பெயர் பதிவுக்கு தேர்தல் ஆணையத்திடம் நேரமும் கேட்டுள்ளார். இந்நிலையில், வெளிநாட்டை சேர்ந்த ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், தான் தீவிர அரசியலில் ஈடுடப் போவதாகவும், இனிமேல் படம் நடிக்கும் எண்ணம் இல்லை என்று கூறி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போது தயாராகி வரும் இரண்டு படங்களை தவிர வேறு படங்களில் நடிக்க மாட்டேன் என்றும் கூறி உள்ளார்.

 

More articles

Latest article