பிரபல நடிகையும் பரதநாட்டியக் கலைஞருமான ஹேம மாலினி இந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தவர்.

71 வயதான நடிகை ஹேம மாலினிக்கு கலா சக்ரவர்த்தினி விருது வழங்கப்பட்டது.

ஹேம மாலினி அவருடைய ட்விட்டர் பக்கத்தில், “ஒரு கலைஞராக எனது பங்களிப்பிற்காக “கலா சக்ரவர்த்தினி” என்ற விருது வழங்கப்பட்டது. புராண கதைகளை நாடகங்கள் மூலம் விளக்கும் பிரபல கலைஞர்களின் கையால் இந்த விருதை பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி” என பதிவிட்டுள்ளார்.