பெங்களூரு:

ர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு மோடி உதவுவதாக தெரிவித்துள்ளார் என்று முதல்வர் குமாரசாமி கூறி உள்ளார்.

அதை உறுதிப்படுத்தும் வகையில், கர்நாடக மக்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என்று மோடி டுவிட் போட்டுள்ளார்.

கர்நாடகாவில் சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தும், சூறைகாற்று காரணமாக பல வீடுகளும்   சேதமடைந்துள்ளன. மழை நீர் பள்ளிக்கூடங்கள், தொழிற்சாலைகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் துயரத்துக்கு ஆளாகி உள்ளனர்.

தொடர் மழை மற்றும் சூறைக்காற்று  காரணமாக கடற்கரை பகுதிகளான தக்ஷின கன்னடா, உடுப்பி மாவட்டங்களில் மழைநீர் தேங்கி பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகள் முழுவதும் தண்ணீரில் மூழ்கி உள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் கடுமையான பாதிப்பு ஆளாகி உள்ளனர்.

இந்நிலையில், கர்நாடக முதல்வராக பதவி ஏற்ற முதல்வர் குமாரசாமி கடந்த வாரம்  டில்லி சென்று  பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தபோது, இதுகுறித்து பேசியதாகவும், அதற்கு பிரதமர் உதவி செய்வதாக உறுதி அளித்ததாகவும் கூறினார். மேலும், இதுகுறித்து உள்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தியதாகவும் கூறினார்.

அதைத்தொடர்ந்து, கர்நாடக நிலவரம் குறித்து மோடி தனது டுவிட்டர் பதிவில், மோடி கூறியதாவது:

“கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட அனை வரின் பாதுகாப்பிற்கும் நல்வாழ்வுக்கும் நான் பிரார்த்தனை செய்கிறேன். அதிகாரிகளுடன்  பேசி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேவையான  அனைத்து சாத்தியமான உதவிகளும் செய்யப்படும்” என்று கூறி உள்ளார்.

அதுபோல மத்திய உள்துறை அமைச்சகம் சார்பிலும் தேவையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தக்ஷினா கன்னடா பகுதியில் பலத்த மழை காரணமாக ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், மங்களூர் பகுதியில் 52 வீடுகளும், பந்த்வால் பகுதியில் 12 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், இதன் காரணமாக 9 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்த பகுதி காவல்துறை துணைஆணையர் சசிகாந்த் செந்தில் கூறி உள்ளார்.

மேலும், கடலோர பாதுகாப்பு படையினர் மூலம் பொதுமக்கள் மீட்கப்பட்டு, மேடான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர், மேலும் பல முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.