ரியாத்: அரபு நாடான சவுதி அரேபியா மெக்கா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் யாத்ரீகர்கள் தொழுகை நடத்த முடியாத நிலை எழுந்துள்ளது.
இஸ்லாமியர்களின் புனிதஸ்தலமான மெக்கா, கொரோனா பொதுமுடக்கம் காரணமாக யாத்ரிகர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர், 7 மாதங்களுக்குப் பின் நவம்பர் 1ந்தேதி முதல் வெளிநாட்டு யாத்திரீகர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி பல நாடுகளில் இருந்து கொரோனா கட்டுப்பாடுகளுடன் தினசரி 10ஆயிரம் பேர் ஹஜ் யாத்திரை வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது மெக்கா மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மெக்காவை சுற்றி குளம்போல தண்ணீர் தேங்கியுள்ளது. இதன்காரணமாக ஹஜ் பயணிகள் அங்கு யாத்திரை நடத்தவும், தொழுகை செய்யவும் சிக்கல் எழுந்துள்ளது.