அபுதாபி: அமீரக நாட்டின் தேசிய தினத்தை ஒட்டி, அந்நாட்டில் போக்குவரத்து தொடர்பான அபராதங்களில் 50% தள்ளுபடியை அறிவித்துள்ளது அந்நாட்டின் காவல்துறை.

உம் அல் குவெய்ன் என்று அழைக்கப்படும் அமீரக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது; அமீரக நாட்டின் 49வது தேசிய தினத்தை முன்னிட்டு, போக்குவரத்து தொடர்பான அபராதங்களில் 50% தள்ளுபடி சலுகை அறிவிக்கப்படுகிறது.

அனைத்து பிளாக் டிராஃபிக் பாயின்ட்டுகளும் ரத்துசெய்யப்படும். வாகனங்களைப் பறிமுதல் செய்வது தொடர்பான கட்டணங்கள் உள்ளிட்ட அபராத கட்டணங்களில் 50% தள்ளுபடி வழங்கப்பபடும்.

இந்த சலுகை ஒருமாத காலத்திற்கு அமலில் இருக்கும். டிசம்பர் 2ம் தேதி முதல் அடுத்தாண்டு ஜனவரி 2ம் தேதி வரை இது நடைமுறையில் இருக்கும்.

நாட்டின் 49வது தேசிய தினத்தையொட்டி, நாட்டு மக்களின் நிதிச் சுமையைக் குறைப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.