சென்னை:

மிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், தொடக்கத்தில் சில நாட்கள் மழை பெய்த நிலையில், அதன்பிறகு மழை பெய்யாமல், வெயில் சுட்டெரித்து வந்தது. இந்த நிலையில் நேற்று முதல் சென்னை உள்பட சில பகுதிகளில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கி உள்ளது.

நள்ளிரவு முதல் இன்று காலை பெய்து வந்த மழை காரணமாக சென்னையின் பெரும்பாலான பகுதிகள் தண்ணீரால் சூழப்பட்டு கடுமையான போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி உள்ளது.  தாம்பரம், பல்லாவரம், கோயம்பேடு, அண்ணாநகர், முகப்பேர் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.

ஓஎம்ஆர் சாலை பகுதிகள், கண்ணகி நகர் போன்ற இடங்களில் பெய்த கனமழை காரணமாக தண்ணீர் தேங்கி உள்ளது. கண்ணகி நகரின் பல பகுதிகளில் தண்ணீர் புகுந்ததால்,அங்குள்ள மக்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளனர்.

இந்த நிலையில், மேலும் 5 நாட்கள் மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்து உள்ளது. அதன்படி, வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் காட்டியிருப்பதாகவும், தமிகம் மற்றும் புதுச்சேரியில் பல பகுகிதளில் மற்றும்  கடலோர மாவட்டங்களில் வரும் டிசம்பர் மாதம் 1-ஆம் தேதி கனமழை பெய்யும் வாயப்பு உள்ளது.

அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழக கடலோர பகுதிகளில் கனமழை பெய்வதற்கு சாதகமான சூழல்கள் உருவாகி யுள்ளன. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், புதுவை, கடலூர், நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களிலும் பிற மாவட்டங்களிலும் மழைக்கு நல்ல மழை பெய்யும். அது போல் மதுரை, விருதுநகர், நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் நவம்பர் 30 முதல் மழை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது.

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், சென்னையில் விடிய விடிய பெய்த கனமழையில் அதிகபட்சமாக தாம்பரத்தில் 14 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என்று தெரிவித்துள்ளது.