சென்னை: தொடர் கனமழை காரணமாக தமிழ்நாட்டில்  சென்னை ஐந்து மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும், இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்புமுகாம் நடைபெறுவதால், ஏற்கனவே சென்னை உள்பட பல மாவட்ட பள்ளிகளுக்கு  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவித்துள்ளது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் தமிழ்நாட்டில் அவ்வப்போது லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. தற்போது வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதால், கடலோர மாவட்டங்கள் உள்பட பல இடங்களில் மழை பெய்து வருகிறது.  தொடர் கனமழை காரணமாக தமிழ்நாட்டில் ஐந்து மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இதேபோன்று சென்னை மற்றும் திருவாரூர் மாவட்டங்களிலும், கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், செங்கல்பட்டு மாவட்டம் முழுவதுமுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு வகுப்புகள் எதுவும் நடத்தக்கூடாது எனவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளிலும், புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ஏற்கனவே,  வாக்காளர் சிறப்பு முகாம்  காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர், கனமழை காரணமாக விடுக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் தான் சனிக்கிழமையான பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டு இருந்த  நிலையில், கனமழை தொடருவதால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் திருவாரூர் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் இன்று விடுமறை என அறிவித்துள்ளது ஆசிரியர்கள் மாணவர்களிடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது. யாரை ஏமாற்ற இந்த நாடகம் என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.