சென்னை: தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, பொதுமக்கள் பாதுகாப்பு கருதி அவசர எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் வாட்ஸ்அப் மூலமும் தகவல் தெரிவிக்கலாம் என அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

தமிழத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பிட்ட நீர்நிலைகள் நிரம்பி,வருவதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது, அத்துடன் 9445869848 என்ற எண்ணிற்கு வாட்சப் மூலம் புகார் மற்றும் உதவி கோரலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

காற்று மாறுபாடு காரணமாக தமிழகத்தின் தென்மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையிலும் அவ்வப்போது மழை பெய்கிறது. நேற்று தென்மாவட்டங் களான  நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது. இன்று தேனி, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், மழை பாதுகாப்பு  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அவசர உதவி எண்களை அறிவித்துள்ள்ளது. மாவட்ட கட்டுப்பாட்டு எண் 1077 எனவும், மாநில கட்டுப்பாட்டு எண் 1070 எனவும் தெரிவிக்கப்பட்டுஉள்ளது. மேலும்  பாதிப்புகளை 9445869848 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப்  மூலமும்  தொடர்பு கொண்டு தெரியப்படுத்தலாம் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் அறிவித்துள்ளார்.