சென்னையில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜனவரி கனமழை! வெதர்மேன் தகவல்…

Must read

சென்னை: தமிழகத்தில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்துவரும் நிலையில், சென்னையில் நள்ளிரவு முதலே மழை கொட்டி வருகிறது. கடந்த 12 மணி நேரத்துக்கும் மேலாக பெய்து வரும் மழையானது 100 ஆண்டுகளில் இல்லாத அளவு இன்று பெய்துள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்து உள்ளார்.

1915ம் ஆண்டுக்கு பிறகு, முதன்முதலாக சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில்,  100 ஆண்டுகளில் அதிக ஜனவரி மாத மழை தற்போது பெய்து வருகிறது என்பதை சுட்டிக்காட்டியிருப்பதுடன், இந்த மழைக்கு காரணமாக எந்தவொரு சூறாவளியும் இல்லை, குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை போன்ற எந்தவொரு அறிகுறியும் தென்படவில்லை என்றும் தெரிவித்து உள்ளார்.
நள்ளிரவுமுதல் சென்னையில் பெய்து வரும் மழையில், அதிகப்பட்சமாக தரமணியில் 170 மி.மீ மழை பெய்துள்ளது. சென்னையில் இதுவரை சுமார் 20 மிமீட்டர் அளவிலேயே மழை பெய்து வந்துள்ளது. ஆனால், ஜனவரி மாத மழையை பொறுத்த மட்டில், கடந்த  15 மணி நேரத்திற்குள் 7 மடங்கு அதிகம்  பெற்றுள்ளோம். மழை இன்னும் சில மணி நேரம் தொடர வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்திருப்பதுடன்,  அடுத்த சில மணிநேரங்களில் கடலோரப் பகுதிகளிலிருந்து கடைசி மேகங்கள் நகர்ந்து நகரின் உட்புறப் பகுதிக்குச் சென்றபின் படிப்படியாகக் குறையத் தொடங்கும்  என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சென்னையின் நகர்ப்பகுதிகளில் பதிவான மழை விவரம்
தரமணி – 55 + 115 = 170 மிமீ
மீனம்பாக்கம் – 44 + 105 = 149 மிமீ
நுங்கம்பாக்கம் – 63 + 77 = 140 மிமீ
அண்ணா பல்கலைக்கழகம் (கிண்டி) – 47 + 85 = 132 மிமீ
இந்துஸ்தான் பல்கலைக்கழகம் (கேளம்பாக்கம்) – 62 + 66 = 128 மிமீ
வில்லிவாக்கம் – 57 + 53 = 110 மிமீ
சோமங்கலம் (மேற்கு தாம்பரம்) – 22 + 87 = 109 மிமீ
பூந்தமல்லி – 23 + 71 = 94 மிமீ
எண்ணூர் – 34 + 33 = 67 மிமீ

சென்னை நகரம் (நுங்கம்பாக்கம்) 150 ஆண்டுகளில் முதல் 24 மணிநேர மழை ( மிமீ)

212.9 – 15.01.1915 (அனைத்து நேர பதிவு)
99.8 – 02.01.1920
82.8 – 05.01.1903
77.0 – 06.01.2021 (நாளை காலை 8.30 மணிக்கு முடிவடையும் மழை பெய்யும்)
67.8 – 02.01.2020
66.9 – 13.01.1986
66.5 – 01.01.1909
63.0 – 05.01.2021 (உண்மையான மழை 140 மி.மீ (63 + 77) ஐ தாண்டியது, ஏனெனில் காலை 8.30 மணிக்கு கட்-ஆஃப் மழை அளவீடுகள் பிரிக்கப்பட்டுள்ளன)

இவ்வாறு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

More articles

Latest article