கோவை : கோவிலின் முன்பு வீசப்பட்ட இறைச்சி : சமூக வலை தளத்தில் சர்ச்சை

Must read

கோவை

கோவையில் ஒரு கோவிலின் முன்பு இறைச்சித் துண்டுகள் கிடந்ததாக இந்து மக்கள் கட்சியின் பதிவால் சமூக வலைத் தளத்தில்  சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

 
 

இந்து மக்கள் கட்சியின் அதிகாரப் பூர்வ டிவிட்டர் பக்கத்தில் செய்தி ஒன்று புகைப்படத்துடன் வெளியிடப்பட்டது.    இதில் கோவையில் உள்ள அருள்மிகு வேணுகோபால கிருஷ்ணஸ்வாமி கோவிலில் இறைச்சித் துண்டுகள் வீசப்பட்டுக் கிடந்தாக புகைப்படத்துடன் குறிப்பிடப்பட்டது.  இதை யாரோ இந்துமத விரோதிகள் வீசி இருக்கலாம் என பலரும் சந்தேகம் கொண்டனர்.

இந்நிலையில் கோவை நகர காவல்துறை அந்த பதிவுக்கு அளித்த பின்னூட்டத்தில் “இது தொடர்பாக எஃப் ஐ ஆர் பதியப்பட்டுள்ளது.   குற்றவாளி ஹரி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  இது போன்ற விவகாரங்களில் காவல்துறை துரிதமாக நடவடிக்கைகள் எடுக்கும்  நான் அனைவரும் சமூக ஊடகங்களில் வரும் தகவலுக்குப்  பொறுப்பு ஏற்போம்” எனப் பதிந்திருந்தது.

மேலும் ஒருவர்,”இதோ தற்போதைய நிலை.  எஸ் ஹரி ராம் பிரகாஷ் என்பவர் பன்றி மாமிசத்தை வேணுகோபால கிருஷ்ணசாமி கோவில் மற்றும் ராகவேந்திரா கோவில் உள்ள இடத்தின் முன்ப வைத்ததற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது காவல்துறை 153 ஏ மற்றும் 295ஏ ஆகிய பிரிவின் கீழ் வழக்குபதிந்துள்ள்து” எனத் தெரிவித்துள்ளார்.

மற்றொருவர் “ஹரி என்பது  இந்துப் பெயர்” எனப் பதிந்துள்ளார்.

வேறு ஒருவர், ”நீங்கள் யாருடன் இப்போது சண்டை போட முடியும்? குற்றவாளியின் பெயர் ஹரி ஆயிற்றே?  அது எஃப் ஐ ஆரிலும் உள்ளதே” எனப் பின்னூட்டம் இட்டுள்ளார்.

More articles

Latest article