சென்னை :
சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தலைமை செவிலியராகவும், செவிலியர் கண்காணிப்பாளராகவும் பணிபுரிந்தவர், ஜோஸ் மேரி பிரிசில்லா. கடந்த 27ம் தேதி இரவு உடல்நல குறைவால் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார், இவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், இது குறித்து முறையான துறை ரீதியிலான விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
58 வயதாகும் சிஸ்டர் ஜோஸ் மேரி பிரிசில்லா 2020 மார்ச் மாதம் பணியில் இருந்து ஓய்வுபெற்றிருக்க வேண்டியவர், ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும், பணி நீட்டிப்பு வழங்கி தமிழக அரசு ஆணை பிறப்பித்திருந்ததைத் தொடர்ந்து பணி நீட்டிப்பு பெற்றார்.
இந்த பணி நீடிப்பால், கடந்த மூன்று மாதங்களில் ஓய்வு பெற இருந்த அரசு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பலரும் தங்களுக்கு கிடைக்க வேண்டிய ஒய்வு ஊதிய பலன்களை பெறமுடியாமல், தங்களின் பல்வேறு செலவுகளுக்கு ஓய்வு ஊதிய பணத்தை நம்பி இருந்தவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளானார்கள் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில், செவிலியர் பிரிசில்லா கடந்த 24 ம் தேதி உடல்நலக் குறைவால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததாக மருத்துவமனை கொடுத்த குறிப்பில் இருப்பதாக பிரிசில்லாவின் தம்பி ஆன்டுரூஸ் கூறியிருந்தார்.
மருத்துவமனை நிர்வாகமோ அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லையென்றும் அந்த குறிப்பில் தவறுதலாக இடம்பெற்றுவிட்டது என்றும் முன்னுக்குப்பின் முரணாக கூறியது. பின்னர் அவர் கொரோனா தொற்றால் உயிரிழக்கவில்லை என்று கூறி அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தது.
பணியில் இருக்கும் அரசு மருத்துவ பணியாளர்கள் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தால் அவர்களுக்கு 50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது, ஓய்வூதிய பலன்களையே அரசின் நிதிநிலையை காரணம் காட்டி காலம் தாழ்த்தி வரும் நிலையில் இந்த அதிகப்படியான பலன்களை வழங்க அரசிடம் போதிய நிதி ஆதாரம் உள்ளதா என்ற சந்தேகம் இப்போது எழுந்துள்ளது.

இதனால், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் மத்தியில் அரசின் மீது ஏற்பட்டுள்ள அதிருப்தியை திசைதிருப்பவே, மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் செய்யும் சேவையை பாராட்டி அனைவரும் ஊக்குவிக்கவேண்டும், அரசுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று கேட்டுக்கொண்டார் என்றும் கூறப்படுகிறது.

  • 55 வயது கடந்தவர்களை கொரோனா வைரஸ் வெகுவாக தாக்கும் அபாயம் உள்ளது என்று மக்களுக்கு நாள்தோறும் அறிக்கை வாசிக்கும் சுகாதாரத்துறை 58 வயது நிறைவடைந்தவர்களுக்கு குறிப்பாக மருத்துவ துறையில் இருப்பவர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கும் அரசின் முடிவிற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை ?
  • மூன்று மாதங்களாகியும் கொரோனா வைரஸ் குறித்த புள்ளிவிவரங்களில் முன்னுக்குப்பின் முரணாக கூறிவரும் சுகாதார துறையை நிர்வகிக்க திறமையுள்ள அதிகாரிகளை நியமிக்காதது ஏன் ?
  • முன்னுக்குப் பின் முரணான பரிசோதனை முடிவுகளாலும் புள்ளிவிவரங்களாலும் எத்தனை சாமானியர்கள் உயிரிழக்க நேர்ந்தது ?
  • கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேல் நீடிக்கும் இந்த தொற்று நோயால் இதுவரை எத்தனை பேர் 14 நாட்களுக்கும் மேல் சிகிச்சையில் உள்ளனர் ? எத்தனை பேர் 28 நாட்களுக்கு மேல் சிகிச்சையில் உள்ளனர் ? அப்படி இருப்பவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சை என்ன ?
  • 7 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சையளித்ததாக கூறும் நிலையில் அவர்கள் 7 பேரும் பிளாஸ்மா சிகிச்சைக்கு முன் எத்தனை நாள் குணமாகாமல் இருந்தார்கள் ?
  • அவர்களுக்கு பிளாஸ்மா தானம் செய்தவர்களை பற்றி செய்தி வெளியிட்டு மற்றவர்களை தானம் செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்தாதது ஏன் ?

என்று பல்வேறு தரப்பினர் கேள்வியெழுப்பி வரும் வேலையில், தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம் சார்பாக இறந்துபோன செவிலியர் பிரிசில்லா மரணம் குறித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளனர், அதில் :

தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம் சார்பில் பல்வேறு முறை மருத்துவமனை முதல்வா் அவா்களிடம் பேசிய போதும் செவிலியர் பிரிசில்லா மரணம் குறித்து எங்களுக்கு சாியான விளக்கமளிக்க மறுத்தது ஏன்?

சென்னையில் உள்ள பொிய மருத்துவமனையில் பணிபுாியும் ஒரு செவிலிய கண்காணிப்பாளருக்கே சிகிச்சையில் இவ்வளவு அலட்சியமெனில் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் பணிசெய்யும் செவிலியா்களின் நிலை என்ன? இனிமேல் எப்படி செவிலியா்கள் தைாியமாக கொரோனா வாா்டு பணி செய்வார்கள்? நிா்வாகம் எங்களுக்கு நிச்சயம் விளக்கமளிக்க வேண்டும். எங்களது செவிலிய கண்காணிப்பாளாின் சிகிச்சை முறைகளில் அலட்சியமாக இருந்த மருத்துவமனை முதல்வா் டாக்டா்.ஜெயந்தி அவா்கள் மீது துறை ரீதியான விசாரணை செய்து தவறிழழைத்திருந்தால் உாிய நடவடிக்கை எடுக்கவேண்டி தமிழக அரசை வலியுறுத்துகிறோம். மேலும் அவருக்கு எங்களது கண்டனத்தையும் இக்கனம் பதிவு செய்கிறோம்.

கொரோனா பாசிடிவ் எனில் இறந்த எங்கள் செவிலிய கண்காணிப்பாளருக்கு கிடைக்கவேண்டிய அனைத்து பணப்பயன்களையும் தாமதிக்காமல் வழங்கி, இதற்கு இழப்பீடாக அவா் வாாிசுககள் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என இதுகனம் தமிழக அரசை மன்றாடி கேட்டுக்கொள்கிறோம்.

என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.