Skip to content
  • Thu. Sep 24th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
தமிழ் நாடு

சென்னையில் அரசு போக்குவரத்து தொழில்நுட்ப பணியாளர்கள்  பணிக்கு திரும்ப உத்தரவு

May 30, 2020

சென்னை :

 சென்னை மாநகரப் போக்குவரத்து பிரிவில் தற்போது அரசு ஊழியர்களின் வசதிக்காக சில பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப பணியாளர்களும் வேலைக்கு திரும்ப போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டு உள்ளது.

கொரோனா தடுப்பு ஊரடங்கு வரும் 31ந்தேதியுடன் முடிவடைய உள்ளது. ஆனால், மேலும் 15 நாட்கள் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்  தமிழகஅரசு பல்வேறு தளர்வுகள் அறிவித்துள்ள நிலையில்,  பொதுமக்களின் தேவைகாக  போக்குவரத்தை மீண்டும் இயக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.  இதற்கிடையில் பேருந்துகளின் எஃப்சி முடிவடைய உள்ளதால், அதை புதுப்பிக்கும் வகையில், பேருந்துகளை சரிசெய்ய தொழில்நுட்ப பணியாளர்களை வேலை வர அறிவுறுத்தி உள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகர் போக்குவரத்து கழகம்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மாநகர போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் 3584 பேருந்துகளில் அத்தியாவசிய பணிகளுக்காக இயக்கப்படுகின்ற சுமார் 300 பேருந்துகளை தவிர்த்து மற்ற அனைத்து பேருந்துகளும் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பேருந்துகளில் 1775 பேருந்துகளின் HFC & HC ஆகியவை ஜூன் 2020-க்குள்ளாக Expiry ஆகின்றன.
எனவே மேற்கண்ட பேருந்துகளை புதுப்பித்து ஆய்வு செய்து Fitness Certificate வாங்க வேண்டி உள்ளதால் MTC (W), FC Unit-கள் மற்றும் RC Unit-களில் பணிபுரியும் பணியாளர்கள் இரண்டு நாளுக்கு ஒரு முறை (50 சதவீதம் அடிப்படையில்) உடனடியாக பணிக்கு வரும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பணியாளர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்:-
பணிக்கு வரும் பணியாளர்கள் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும். கையுறை  கட்டாயம் அணிய வேண்டும். கைகளை அடிக்கடி சோப் போட்டு கழுவ வேண்டும். கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும்.
தொழிற்கூடங்கள, பணி செய்யும் இடங்கள், கேண்டீன், ஓய்வறை, நேரக்காப்பாளர் அறை மற்றும் பண்டக சாலைகளில் கட்டாயம் 3 அடி சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேணடும்.
பணியாளர்களுக்கு ஏதேனும் உடல்நிலை சரியில்லை என்றால் முன் அனுமதி பெற்று விடுப்பு எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post navigation

கோவை : கோவிலின் முன்பு வீசப்பட்ட இறைச்சி : சமூக வலை தளத்தில் சர்ச்சை
30/05/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு மண்டலவாரி பட்டியல்…

Related Post

தமிழ் நாடு

வீட்டுக்கூரை சூரியசக்தி திட்டத்திற்கு தமிழக அரசு மானியம்… சோலார் பேனல் அமைக்க ரூ.1 லட்சம் வரை மானியம்!

தமிழ் நாடு

தமிழகத்தில் புதிதாக 7 அரசு செவிலியர் கல்லூரிகள்! இந்த ஆண்டு முதலே மாணவர் சேர்க்கை…

தமிழ் நாடு

₹2,109 கோடி பாக்கி… தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் திணறும் ஒப்பந்ததாரர்கள்!

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer