Bigg Boss Tamil 5: சுருதியின் உடையை குறைக்கூறிய தாமரை…!

Must read

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மூன்று வாரங்களை கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10:00 மணிக்கும் சனி மற்றும் ஞாயிறுகளில் இரவு 9:30 மணிக்கும் ஒளிபரப்பாகிற பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி இம்முறையும் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தனர்.

1. மதுமிதா (ஆடை வடிவமைப்பாளர்)
2. இசைவாணி (கானா பாடகி)
3. அபிஷேக் (விமர்சகர்)
4. ராஜு ஜெயமோகன் (சீரியல் நடிகர்)
5. பிரியங்கா தேஷ்பாண்டே (தொகுப்பாளினி)
6. அபினய் வட்டி (நடிகர்)
7. சின்னப்பொண்ணு (நாட்டுப்புற பாடகி)
8. பவானி ரெட்டி (சீரியல் நடிகை)
9. நாடியா சாங் (மலேஷியாவை சேர்ந்த மாடல் அழகி)
10. இமான் அண்ணாச்சி (நகைச்சுவை நடிகர்)
11. வருண் (நடிகர்)
12. ஐக்கி பெரி (ராப் பாடகி)
13. அக்‌ஷரா ரெட்டி (மாடல் அழகி)
14. நிரூப் நந்தகுமார் (நடிகர்)
15. நமீதா மாரிமுத்து (மாடல் அழகி)
16. சிபி சந்திரன் (மாஸ்டர் பட நடிகர்)
17. சுருதி ஜெயதேவன் (மாடல் அழகி)
18. தாமரைச் செல்வி (நாடக கலைஞர்)

நமீதா மாரிமுத்து, நாடியா, அபிஷேக் வெளியேற்றப்பட்ட்டுள்ளதால் தற்போது 15 போட்டியாளர்கள் உள்ளனர். கடந்த வாரம் நடைபெற்ற பஞ்சதந்திரம் டாஸ்கில் வெற்றி பெறுபவர்கள் நாமினேஷன் லிஸ்டில் இருந்தால் அவர், அதில் இருந்து விடுவிக்கப்படுவார் , ஒருவேளை அவர் பெயர் நாமினேஷனில் இல்லை என்றால் அவர் விருப்பப்படும் நபரை சேவ் செய்து கொள்ளலாம் என பிக் பாஸ் அறிவித்திருந்தார்.

நாணயங்கள் வைத்திருக்கும் ஐந்து பேரை அழைத்த பிக் பாஸ் தங்கள் நாணயத்தை பயன்படுத்தி மதுவிற்கு பதிலாக நீங்கள் ஐவரில் ஒருவர் தலைவராக மாறலாம் என்றார். ஆனால் அனைவரும் மது தலைவராக இருக்க விரும்புவதாக தெரிவித்த நிலையில் அடுத்த வாரம் நாணயத்தை பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து நான்காவது வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்றது. அதில் பாவனி, அபினய், பிரியங்கா, அக்ஷரா, வருண், ஸ்ருதி, இசைவாணி, இமான் மற்றும் சின்னப்பொண்ணு ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர்.

முதல் ப்ரோமோவில் “அண்ணாச்சி மட்டும் நான் என்ன சொன்னாலும் கேக்கவே மாட்டேங்குறாரு. ஓகே கேக்கலைன்னா நேரடியா கமல் சார் கிட்டயே பேசிக்க வேண்டியது தான்” என்கிறார் இசைவாணி. ”நீங்க சொல்றத மூஞ்சில அடிச்ச மாதிரி பேசுறீங்க” என அக்‌ஷரா சொல்ல, “பாட்டு பாடுறத மறந்த, இன்னொன்னு நல்லா பாசமா பேசிட்டு திடீர்ன்னு மாற்ர.. இது என்னன்னே புரியலை” என தாமரைச்செல்வி சொல்ல, “என்னக்கா இப்படியெல்லாம் பேசுறீங்க” என்கிறார் இசைவாணி.

இரண்டாவது ப்ரோமோவில் வீட்டின் தலைவரான மதுமிதாவின் உத்தரவுகளை யாரும் கேட்பதில்லை என கூறி அவர் அழுகிறார். எனக்கு கஷ்டமாக உள்ளது, நான் எது கூறினாலும் யாரும் அதனை கேட்பதில்லை. இப்போது இசைவாணி தான் எல்லா உத்தரவுகளையும் பிறப்பிக்கிறார், அப்போ நான் எதற்கு? நான் தான் இந்த வீட்டில் வீக்கான போட்டியாளரா? அவங்க தான் எல்லாம் பண்றாங்க, நான் ஹவுஸ் மேட்ஸ் தூங்காமல் இருக்கும் வேலையை மட்டும் தான் பார்த்து கொண்டிருக்கிறேன் யாரெல்லாம் உன் பேச்சை கேட்கவில்லை, வீடு முழுவதும் இசைவாணி கட்டுப்பாட்டில் வருமா? என பிக் பாஸிடம் கேளு என சிபி மற்றும் நிரூப் அவரை சமதப்படுகின்றனர்.

சுருதியின் ஆடை சரியில்லை என்று கூறிய தாமரைச் செல்வி! நீங்கள் மட்டும் சரியா என்று எதிர்கேள்வி கேட்ட சிபி! என்று இன்றைய மூன்றாவது புரோமோ அனல்பறக்கும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

More articles

Latest article