சென்னை: அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள பிரபல  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சராக இருப்பவர். கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன். இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை, சென்னை   ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.