சென்னை:
திமுக மாவட்ட செயலர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

சென்னை அறிவாலயத்தில், திமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம், இன்று காலை 10 மணிக்கு, அக்கட்சித் தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது.

அதில், மக்களவை தேர்தல் தொடர்பாகவும், அதற்கான கூட்டணி திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. இப்போதுள்ள கூட்டணியில், எந்த கட்சியை கூடுதலாக சேர்க்கலாம் என்பது குறித்து, முடிவு செய்யப்பட உள்ளது.